Sunday, April 12, 2009






மீனாட்சி : நம்ம செந்திலோட தம்பி மணி street corner- ல
                     tea கடை வெச்சிருக்கிற நாயரோட...

அஷ்வின் : [interrupting].... பொண்ண கூட்டிகிட்டு 
            ஓடிட்டானா?

மீனாட்சி : ...ஐயோ... அது கூட பரவாயில்லையே...

kk              : [interrupting]...நாயர் பொண்ண ஒருத்தன் 
           இழுத்துட்டு ஓடறது உனக்கு பரவாயில்லையா?
           அந்த பொண்ண எவ்ளோ நாளா நான்..I mean......,
           நாயர் எவ்ளோ நல்லவர் தெரியுமா?

மீனாட்சி : ஐயோ.. நான் அதை சொல்லலடா...

ரகு       :[interrupting] oh.. அதை சொல்லலையா? 
          வேற எதை? டேய், நாயர்க்கு ஒரு 
          பொண்ணுதானே....?

[Meenakshi picks up a knife, raghu n kk n aswin quiet 
down n meek immediately]

காயத்ரி  : hey , நீ சொல்லு மீன்ஸ் ..

மீனாச்சி  : நாயரோட அக்காவ இழுத்துகிட்டு ஓடிட்டானாம்...

kk            :[whisperig under breath and acting relieved] அப்பாடி ....

காயத்ரி  : டேய்..

kk            : அடப்பாவமேன்னு சொல்ல வந்தேன்...

அஷ்வின் :அந்த பையனுக்கு இன்னும் 2 நாள்ல கல்யாண 
                  date fix பண்ணி இருந்தாங்களே.....!!

ரகு      : அந்த பொம்பளைக்கு 45 வயசுக்கு மேல 
          இருக்குமேடா..அஷ்வின்,அவன் உன்ன 
          விட காஞ்ச பயலா இருந்திருப்பான் போல
          இருக்கு.. ஹீ ஹீ

மீனாட்சி : 3 நாளைக்கு மின்னாடி Pondicherry க்கு 
          ஓடி போய் church-ல கல்யாணம் பண்ணிக்கிட்டு .....,

kk            : [whispering to self] Jolly-ya honeymoon 
          கொண்டாடிட்டு ....

மீனாட்சி : [ignoring him] நேத்திக்கு night திரும்பி 
          வந்திருக்காங்க...

மாயா    : நல்ல வேலை, கல்யாணத்தை miss பண்ணாம 
                   correct-ஆ வந்துட்டானே..

காயத்ரி  : hey, எல்லாம் காதுல வாங்கி உன் 
          மண்டைக்குள்ள விட்டியா இல்லையா? அவனும்
         அந்த பொம்பளையும் pondicherry-ல Already
         கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...

மாயா    : [indifferent] so?, Pondicherry-ல தானே?

மீனாட்சி : so வா?

மாயா   :அவங்க தான் நேத்தைக்கு nite Madras 
         வந்திட்டாங்களே...

[All of them giving the weirdest of the looks]

மாயா : Pondicherry ல, கல்யாணம் பண்ணிகிட்டா 
              Pondicherry -லதானே அவங்க Husband and Wife.. 
        வெளியூர் போய்ட்டா இல்லல? அவங்க தான் 
       சென்னை வந்திடாங்களே... !

kk       : J3 police station ல கல்யாணம் பண்ணிக்கிட்டா Adayar 
       தாண்டிட்டா செல்லாதுன்னு சொல்லிடுவா போல 
       இருக்கே...

ரகு   : என்ன சொல்ற நீ? Pondicherry ல கல்யாணம் 
        பண்ணிகிட்டாலும்,கூடுவாஞ்சேரி ல கல்யாணம் 
        பண்ணிகிட்டாலும்...

மீனாட்சி  : sahara பாலைவனம், இமயமலை உச்சி , 
                    bay of bengal நடுவுல , J3 police  station-ல , 
           எங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் 
           உலகம் பூரா husband and wife தான்...

மாயா     :[Visibly shocked] WHAT??!!
                   [under her breath,confused] அப்போ college tour 
                   Andaman  போனப்போ...?!! 
                  [aloud]............OH MY GOD!!!

மாயா   :[next moment back to her normal weird self ] ... 
         சரி சரி விடுங்க...யாருக்கு coffee?? ..



This is a scene I wrote for Marina Cafe. It is actually a scene inspired from 'friends'. (Those of you friends freaks will know the scene and characters instantly) . In fact whole marina cafe concept was an 

adaptation of friends which we tried to produce for vijay tv. But sadly Rishi rejected this type of dialogues saying they weren't..... hmm.. I donn remember for what reason he said they weren't gud... chumma I 

felt like putting it up here... wadya think? I feel its crazy mohan kinda stuff ;-)

8 comments:

Priya said...

This is good. Really cute. Had some feeling to it you know. Kind of real and not forcing someone to laugh. I guess it comes naturally. Nice stuff.

Raz said...

this could ve rocked :)

Sugirtha said...

இயல்பான நகைச்சுவை நல்லா இருக்கு. Pretty good Job Li!

Li. said...

@ priya

:-) thank you. but யாராச்சும் பாராட்டினா ஒரு வேலை கலைக்கிராங்கலோன்னு doubt -ஆவே இருக்கு .. :-)

Li. said...

@ akka

I know.. I know.. I know..... hmm...

Li. said...

@sugirtha

நீங்கள் என் வலைப்பதிவில் கருத்துகளும் பாராட்டுக்களும் பதிவது என் உள்ளத்திற்கு உண்மையிலேயே மகிழ்வு. மிக நன்றி.இன்னும் நன்றாய் எழுத ஊக்கம்.

Li. said...

@sugirtha

போன reply பார்த்தா எனக்கே பயமா இருக்கு. தமிழ் இவ்வளவு சுத்தமா இருந்தா நமக்கு ஆகாது. உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றி.

:-)

Sugirtha said...

உங்க தமிழ் நல்லா இருக்கே. நீங்க நிறைய தமிழிலும் எழுதலாமே?

என் கவிதைகளுக்கான பாராட்டுக்கு நன்றி Li!