Thursday, January 14, 2010

சத்தியமா இது ஒரு கவிதை....

வந்துடுச்சு வந்துடுச்சு புத்தாண்டு
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...

வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...

கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...

சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...

பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...

அதனால -

இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...

எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....

தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?

2 comments:

Dhou said...

ஒளி...
கவிதை கலக்கலா இருக்கு....
ஒவ்வொரு வரியும்
படிக்கப் படிக்க புல்லரிக்குது......
புதுக் க‌விதைக்கு
இது ஒரு எ.க.....
கடைசியா...
பேஷ் பேஷ்..
ரொம்ப‌ ந‌ல்லா இருக்குது....

பி.கு:
க‌ரெக்டா நீ சொன்ன‌ மாதிரியே எல்லாம் சொல்லிட்டேனாமா??

aarthi said...

lol...cute...steady a eludirka nu puriyudhu