Tuesday, April 13, 2010

ஊட்டி விடுமுறை....

தலைப்பை பார்த்த உடனே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் முறைகள் பற்றி கூறப் போகிறான் என்று தப்பாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு எனது வணக்கங்கள்..

நிறைய நாட்கள் கழித்து எனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா செல்லக் கிட்டியது. காதல் , நட்பு, பாசம் என பலவும் கண்டு, உணர்ந்து ,அனுபவித்தேன். இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..

கேயன், அரவிந்த் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.. கேயனுடயது பத்து வருடக் காதல் என்றால் , அரவிந்தனுடயது பத்தாவது காதல் என்று சொல்லலாம்.. கணவன், மனைவி என்னும் உறவினை தாண்டி அவர்கள் தம் மனைவியருடன் நண்பர்களாக வாழ்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மாஷா அல்லா . :-)

சரவணனின் காதல் ஒரு புறம். ஓயாமல் போனில் பேசிகொண்டே இருந்ததும், அவன் காதலி அழுவதும், புலம்புவதும் ,ஆராற்றுவதும், அதனை இவன் சாமாதம் செய்து கொஞ்சி ,கெஞ்சி அமைதிப் படுத்துவதும்... எங்களுக்கு சிரிப்பு..

நட்பு. திருமணம் ,வயது, வேலை, எல்லாவற்றையும் தாண்டி இன்னும் மாறாதிருக்கும் பள்ளித் தோழர்களின் நட்பு . எல்லோரிடமும் குறைகள் உண்டு.எங்களிடமும். ஆனால் அதை எல்லாம் மீறி அடிப்படையில் நல்லவர்கள் .
அரவிந்த் இன்னும் இரண்டாம் வகுப்பில் என்னைப் பார்த்து நுழைவுத் தேர்வெழுதி , என்னை விட இரண்டு ரேன்க் முன்னாள் வந்ததை வாஞ்சையோடு கூறிக்கொண்டு இருக்கிறான்..

கார்த்தி எனப்படும் கேயன்.. வாய் தவறி யாரும் அவனை ஒளி என்றோ, என்னை கேயா என்றோ அழைத்துவிட்டால் எங்களுக்குள் இன்னும் சிரிப்புதான்... பள்ளியில் எங்கள் இருவரில் யார் கேயன், யார் ஒளி என்றாய் பிரித்துக் காண முடியாத அளவுக்கு ஒட்டித் திரியும் ரெட்டையராய் இருந்தோம்..

அழாகான சிரிப்புகள்.. விளையாட்டில் போட்டி.. கோபம்.. எல்லாமே நன்றாக இருந்தது.. நவம்பர் மாதம் மாமா (தினேஷ் ) , நான் , பார்த்தது, ஆபத்தான, அமைதியான, பலருக்கும் காணக் கிடைக்காத ஊட்டி. இம்முறை வழக்கமான, ஆபத்தில்லாத விடுமுறை ஊட்டி.

கொஞ்சம் தீர்த்தம். கொஞ்சம் யாகம். புண்ணியம் சேர்த்துக்கொண்டேன் என் கணக்கில். ரயில் பயணம் - அழகு .

போதுமான முறை தோற்றால், தோல்வியையும் வெற்றியையும் ஒரே போன்று பார்க்கும் பக்குவும் ஏற்பபட்டுவிடும். எனக்கு ஏற்பட்டுவிட்டாயிற்று.

விரும்புபவர்களை நோகடிப்பதும், வெறுப்பவர்களை மன்னிப்பதும் சுலபமாக இருக்கிறது என்று முன்பே ஒரு முறை கூறி இருந்தேன்.. மீண்டும் மீண்டும் நிரூபணம்.

சுஜாதா நாடகங்கள் முழு தொகுப்பு புத்தகம் வாங்கி இருந்தேன்.. என் பிறந்தநாள் வாக்கில் கையில் நிறைய காசு புழங்கியபோது.. வெகு நாட்கள் கழித்து நான் படிக்கும் புத்தகம். குளியலறைப் புண்ணியம்.

வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணம். சபதம் செய்தால் நிச்சயமாக நிறைவேற்ற மாட்டேன் என்று தெரியும். அதானால் வெறும் எண்ணம். பார்க்கலாம்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மீண்டும் விரைவில் எழுத வேண்டுகிறேன். நன்றி. அபத்தமாக, சட்டேன்று நடுவிலேயே முடிக்கிறேன். மன்னிக்கவும்.

9 comments:

நாமக்கல் சிபி said...

//இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..//

நம்பிட்டேன்!

கவிதா | Kavitha said...

//என்.ஆர்.சிபி said...//

சிபி, இந்த கொடுமை எப்ப நடந்தது...?!! வாஸ்து பாத்து பேரை மாத்திட்டீங்களா?

கவிதா | Kavitha said...

//வெறுப்பவர்களை மன்னிப்பதும் //

மன்னிப்பதற்கு நாம் யார் என்று என்றாவது யோசிச்சதுண்டா?

யோசித்தபிறகு... எனக்கு பதில் சொல்லுங்கள்.. சரியா .. :)

Li. said...

@ என் . ஆர் .சிபி

'ஊட்டில' கண்டது/உணர்ந்தது சத்தியமா நண்பர்களின் காதலைத்தான்..

கவிதா | Kavitha said...

//'ஊட்டில' கண்டது/உணர்ந்தது சத்தியமா நண்பர்களின் காதலைத்தான்..//

அட இதுக்கு போயி எதுக்கு சத்தியம்.. அவரு நம்பின்னா நமக்கு என்ன நம்பாட்டி நமக்கு என்ன...

Li. said...

@ kavitha
மன்னிப்பதற்கு நாம் யாரும் இல்லை. நாம் நாம்தான். பாதிக்கப்பட்டவர்கள்/ காயப்படுத்தப்பட்டவர்கள்/ மனிதர்கள்.

தத்துவத்திற்காகவோ அல்லது கோபத்திலோ மட்டும்தான் மன்னிக்க நாம் யார் என்றெல்லாம் கேள்விகள் பிறக்கும்...

வாழ்க்கையில் தினம் தினம் கோபப்படுவதும்.. மன்னிப்பதும்/ மன்னிப்பு கோருவதும் இயல்பாக நடப்பது என்று நினைக்கிறேன்.

கவிதா | Kavitha said...

ஒருவரை மன்னிக்க வேண்டும் என்று எப்போது தோன்றும்? அவர் தவறு செய்துவிட்டார்/ கஷ்டபடுத்திவிட்டார் போன்ற மேலும் சில பல காரணங்கள் இல்லையா?

அந்த காரணங்களை அறிவது யார்? நாம் தானே.. நமக்கு தான் அவர் தவறு செய்துவிட்டார் என்று தோன்றுகிறது.. அப்படி தோன்றுவதற்கு நம்முடைய எதிர்ப்பார்ப்பும் ஒரு காரணம் இல்லையா? ஒருவரிடம்.. எதிர்ப்பார்ப்புகள் இல்லாத போது, அங்கு தவறுகளோ.. அல்லது அது சார்ந்த பிறவோ நமக்கு தோன்றாது... தோன்றாது போது மன்னிப்பு என்ற வார்த்தைக்கே வேலை இல்லாமல் போகும்..

ஆக நமக்கு தோன்றும் நமக்கு சரி என்றும் படும் எதுவும் சரியா என்றால் ??? இல்லை என்றே வந்து முடியும் - இது அடுத்தவர் சார்ந்த விஷயத்திற்கு மட்டும் பொருந்தும். நமக்கு - நான் எடுக்கும் முடிவுகள் சரியே.!! :)

Li. said...

@ kavitha
மிக மிக அழகான விவாதம். நான் யாரிடமும் விவாதித்தால் இதைப் போல் தான் பறைசாற்றுவேன். . ஆனால்..

எதிர்பார்ப்பே இல்லாமல் பழகுவேன் என்பது போலித்தனம். எல்லா உறவிலும், எதிர்பார்ப்பு இருக்கிறது. இருக்கும்.

எந்தவித எதிர்ப்பார்ப்பும் / ஆசையும் / பற்றும் இல்லாமல் வாழ்வதற்கு எல்லாரும் பக்குவப்பட்டுவிட்டால் :-) அப்பறம் என்னங்க பிரெச்சனை...

கவிதா | Kavitha said...

ம்ம்ம்ம்.. 40 வயதிற்கு மேல் பக்குவப்பட்டால் அது வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பாடம் னு சொல்லலாம்...வயதில் ஏற்படும் முதிர்ச்சி ன்னு சொல்லலாம்..

அதுவே.. சிறுவயதில், இளமையிலேயே அந்த பக்கவும் இருந்தால், அதனை வரவைத்துக்கொண்டால்...... உங்களின் கடைசி பதிலில் கடைசி வரி..


பிரச்சனையே இல்லைங்க.. :)) எப்போதுமே சந்தோஷமாக இருக்கலாம்.

எதிர்பார்ப்பு - கிடைக்கும் அல்லது கிடைத்துக்கொண்டு இருக்கும் பட்சத்தில் இருக்கும்... கிடைக்காது என்று தெரிந்துவிட்டால் அதுவும் இல்லாமல் போயிவிடும்.. :)