Monday, July 13, 2020

நீயும் என் நண்பனே..

~ விஜய் சேதுபதி , விகடன் பேட்டி
12 ஜூலை 2020 
— — — — — — —
நீயும் என் நண்பனே

விடிகின்ற பொழுது ,
முடிகின்ற வரையில்
கடிகார முட்கள்
வலியாக குத்த,

நிற்காத வாழ்க்கை
நீராகத் தள்ள
விருப்பென்ன,வெறுப்பென்ன
தனியாக சொல்ல?

படுக்கின்ற இரவு
முடியாது நீள
விழிமூடும் உறக்கம்,
கலையாமல் போக,

பிறக்காது இருந்தாலே
வழக்கேதுமில்லை,
என எண்ணாத நாட்கள்
வரப்போவதில்லை

ஏக்கத்தில் அசைபோட,
வாழ்க்கைக்கு,விடைதேட
கூட்டத்தில் தனியாக
வாழ்கின்றாய் இயல்பாக

எங்கோ நீ இருந்தாலும்
மௌனத்தில் கரைந்தாலும்
மனகனத்தில் ஒன்றான
நீயும் என் நண்பனே

No comments: