மீனாட்சி : நம்ம செந்திலோட தம்பி மணி street corner- ல
tea கடை வெச்சிருக்கிற நாயரோட...
அஷ்வின் : [interrupting].... பொண்ண கூட்டிகிட்டு
ஓடிட்டானா?
மீனாட்சி : ...ஐயோ... அது கூட பரவாயில்லையே...
kk : [interrupting]...நாயர் பொண்ண ஒருத்தன்
இழுத்துட்டு ஓடறது உனக்கு பரவாயில்லையா?
அந்த பொண்ண எவ்ளோ நாளா நான்..I mean......,
நாயர் எவ்ளோ நல்லவர் தெரியுமா?
மீனாட்சி : ஐயோ.. நான் அதை சொல்லலடா...
ரகு :[interrupting] oh.. அதை சொல்லலையா?
வேற எதை? டேய், நாயர்க்கு ஒரு
பொண்ணுதானே....?
[Meenakshi picks up a knife, raghu n kk n aswin quiet
down n meek immediately]
காயத்ரி : hey , நீ சொல்லு மீன்ஸ் ..
மீனாச்சி : நாயரோட அக்காவ இழுத்துகிட்டு ஓடிட்டானாம்...
kk :[whisperig under breath and acting relieved] அப்பாடி ....
காயத்ரி : டேய்..
kk : அடப்பாவமேன்னு சொல்ல வந்தேன்...
அஷ்வின் :அந்த பையனுக்கு இன்னும் 2 நாள்ல கல்யாண
date fix பண்ணி இருந்தாங்களே.....!!
ரகு : அந்த பொம்பளைக்கு 45 வயசுக்கு மேல
இருக்குமேடா..அஷ்வின்,அவன் உன்ன
விட காஞ்ச பயலா இருந்திருப்பான் போல
இருக்கு.. ஹீ ஹீ
மீனாட்சி : 3 நாளைக்கு மின்னாடி Pondicherry க்கு
ஓடி போய் church-ல கல்யாணம் பண்ணிக்கிட்டு .....,
kk : [whispering to self] Jolly-ya honeymoon
கொண்டாடிட்டு ....
மீனாட்சி : [ignoring him] நேத்திக்கு night திரும்பி
வந்திருக்காங்க...
மாயா : நல்ல வேலை, கல்யாணத்தை miss பண்ணாம
correct-ஆ வந்துட்டானே..
காயத்ரி : hey, எல்லாம் காதுல வாங்கி உன்
மண்டைக்குள்ள விட்டியா இல்லையா? அவனும்
அந்த பொம்பளையும் pondicherry-ல Already
கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...
மாயா : [indifferent] so?, Pondicherry-ல தானே?
மீனாட்சி : so வா?
மாயா :அவங்க தான் நேத்தைக்கு nite Madras
வந்திட்டாங்களே...
[All of them giving the weirdest of the looks]
மாயா : Pondicherry ல, கல்யாணம் பண்ணிகிட்டா
Pondicherry -லதானே அவங்க Husband and Wife..
வெளியூர் போய்ட்டா இல்லல? அவங்க தான்
சென்னை வந்திடாங்களே... !
kk : J3 police station ல கல்யாணம் பண்ணிக்கிட்டா Adayar
தாண்டிட்டா செல்லாதுன்னு சொல்லிடுவா போல
இருக்கே...
ரகு : என்ன சொல்ற நீ? Pondicherry ல கல்யாணம்
பண்ணிகிட்டாலும்,கூடுவாஞ்சேரி ல கல்யாணம்
பண்ணிகிட்டாலும்...
மீனாட்சி : sahara பாலைவனம், இமயமலை உச்சி ,
bay of bengal நடுவுல , J3 police station-ல ,
எங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்
உலகம் பூரா husband and wife தான்...
மாயா :[Visibly shocked] WHAT??!!
[under her breath,confused] அப்போ college tour
Andaman போனப்போ...?!!
[aloud]............OH MY GOD!!!
மாயா :[next moment back to her normal weird self ] ...
சரி சரி விடுங்க...யாருக்கு coffee?? ..
This is a scene I wrote for Marina Cafe. It is actually a scene inspired from 'friends'. (Those of you friends freaks will know the scene and characters instantly) . In fact whole marina cafe concept was an
adaptation of friends which we tried to produce for vijay tv. But sadly Rishi rejected this type of dialogues saying they weren't..... hmm.. I donn remember for what reason he said they weren't gud... chumma I
felt like putting it up here... wadya think? I feel its crazy mohan kinda stuff ;-)