Monday, July 13, 2020

நீயும் என் நண்பனே..

~ விஜய் சேதுபதி , விகடன் பேட்டி
12 ஜூலை 2020 
— — — — — — —
நீயும் என் நண்பனே

விடிகின்ற பொழுது ,
முடிகின்ற வரையில்
கடிகார முட்கள்
வலியாக குத்த,

நிற்காத வாழ்க்கை
நீராகத் தள்ள
விருப்பென்ன,வெறுப்பென்ன
தனியாக சொல்ல?

பிறக்காது இருந்தாலே
வழக்கேதுமில்லை-யென
நினைக்காத நாளேதும் 
வரப்போவதில்லை 

படுக்கின்ற இரவு
முடியாது நீள,
விழிமூடும் உறக்கம்,
கலையாமல் போக,

ஏக்கத்தில் அசைபோட,
வாழ்க்கைக்கு விடைதேட,
கூட்டத்தில் தனியாக
வாழ்கின்றாய் இயல்பாக

எங்கோ நீ இருந்தாலும்
மௌனத்தில் கரைந்தாலும்
வாழ்க்கையின் அயர் நாளும்  
பெருமூச்சில் கடந்தாளும்,

நீயும் என் நண்பனே...

Wednesday, May 23, 2018

இன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.

தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டம். இரண்டாம் நாளாக இன்றும் துப்பாக்கிச் சூடு. மேலும் ஒருவர் பலி என அறிகிறேன்.  ஏறத்தாழ 20 ஆண்டுகளாக காட்டப்பட்டு வந்த உள்ளூர் மக்களின்  எதிர்ப்புகளை மீறி, அந்த விஷ ஆலை மேலும் விரிவாக்கம் செய்யத் துணிகிறது, அரசின் சிப்காட் நிறுவனம் அந்த ஆலைக்கு நிலத் தரகு செய்யப்போகிறது.

இதை அறிந்து வருடக்கணக்கான கோபமும், ஆலை விஷத்தால் கண்ட  துயரமும், சிதறி இருந்த எதிர்ப்புகளை ஒன்றுகூட்டி  தீவிரமான போராட்டமாய் மாற்றுகிறது.  நான்கு மாதங்களுக்கு முன்.

அறவழி போராட்டம். ஒற்றைக் குமிழத்தில், தெளிவாக , அமைதியாக,  முன்னெடுக்கப் படுகிறது. ஒற்றுமை வலுக்கிறது. அரசியல் தலைவர்கள், அவர்தம் கட்சிகள் தள்ளி நிறுத்தப்படுகின்றன.

நீதிமன்றத்தின் மூலமாகவும், பின்னர் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாகவும் 'தற்காலிக ஆலை செயல் நிறுத்தம்' கிடைக்கிறது. அரசின்(-அரசுகளின்) விளையாட்டுகளை பற்றியும் , நீதிமன்றத்தின்  தடுமாற்றங்களையும் ,  நன்கு அறிந்த மக்கள் முழுதும் மகிழ்ச்சி அடைய வில்லை. நிரந்தரத் தீர்வுக்காக அறவழி போராட்டங்களை தொடர்கின்றனர்.

நூறு நாட்கள் சரியாக செல்கிறது போராட்டம். மாவட்டத்தின் தலைவர் -மாவட்ட ஆட்சியரை அவர் அலுவலகத்தில் சந்தித்து நிரந்தரத் தீர்வுக்கு கட்டாயப்படுத்த முடிவு செய்யப்படுகிறது. அரசு 144 தடை உத்தரவு நடைமுறைப் படுத்துகிறது.

இரண்டாயிரம் பேராக தொடங்கும் பேரணி சுற்றி இருக்கும் பத்து கிராம மக்களின் ஆதரவால் ஆறாயிரம், பத்தாயிரம், என உயர்ந்து கடைசியில் இருவதாயிரம் பேராக ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நெருங்குகிறது.அமைதியாக.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதும் அல்ல. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்தும் அல்ல. தனியார்மயம், ஏகாதிபத்தியம் , முதலாளித்துவம் என்று எந்த அரசு-வியாபாரக்  கூட்டுக்கொள்கைகளை எதிர்த்தும் அல்ல.

அப்பட்டமாக விதிகளை மீறி செயல்பட்டு, பணப் பேராசையால்,எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல்,  ஊரின் குடிநீரையும், காற்றையும் , மண்ணையும் , மக்களையும் மீள முடியாத பாதிப்புகளுக்கு ஆளாக்கிய/ஆளாக்கும் வரலாறுடைய,  ஒரு தனி தனியார் நிறுவனத்தினை எதிர்த்து, அதனை மூடக்கோரி  நடக்கும் பேரணி.

நூறு நாட்களாக மிக மிக அமைதியாக , துளி வன்முறை இல்லாமல் போராடிய மக்கள்.

கொலைக்கு மிகவும் துல்லியம் தரும் போர்க்கள பாணி  உயர்முகட்டு நிலைகளில் அமர்ந்து, 'ஒரு உயிராவது போக வேண்டும்', ஒரு தியாகியையாவது இந்த மண்ணிற்கு தரவேண்டும், என்ற தீர்க்க முடிவில்  காவல்துறையும், 'தமிழகம் காஷ்மீராக மாறிவிடாமல்' தடுக்கும் நல்லெண்ணத்தில் அருந்ததி  அரசுகளும் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை ஒடுக்க முடிவெடுக்கின்றன. தலைகளையும் , மார்பை நோக்கியும் ஒரு இஸ்ரவேல் பாணி  தாக்குதல் நடத்திக் காட்டப்படுகிறது.

முன்பகல் 1 உயிர்.மதியம் 6 பேர் பலி. மாலைக்குள் ஒரு மளிகைக் கடைக்காரர்,   பதின்ம வயது மாணவி, போராட்டத்தில் கலந்தே கொள்ளாத  பெண் உட்பட 11 பேர் கொலை.அனைவரும் முகத்திலும், மார்பிலும் குண்டுகள்.

துடிக்கின்றனர் மக்கள். அழுகைகள். உலகில்  எங்கெங்கோ இருந்து ஓலங்கள். அதிர்ச்சி. கண் முன்னே இன்னொரு மே 18. யாராலும் நடப்பதை / நடந்ததை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. கோபம் கொப்பளிக்கிறது.

அதற்குள் சில சில குரல்கள், "குடியிருப்பு பகுதிகளை தீவைத்தனர் போராட்டத்தினர்" ,"எரி குண்டுகள் வீசப்பட்டனவாம் " , "ஆட்சியர் அலுவலகம் கொளுத்தி சூறையாடப்பட்டது" , "கம்புகளையும், கற்களையும் கொண்டு 'வன்முறையின் உச்சகட்டமான' 'காவலர்களைத்   தாக்குவது' நடந்தது".

ஐயத்தின் விதைகள் தூவப்பட்டன.

"நடந்தவை கண்டிக்கப்பட வேண்டியவைதான்....ஆனால்..". என்றும்,

"போராட்டத்தைக் கடத்திய 'விளிம்பு நிலை கும்பல்களின்'  வன்முறைக்கு  பொது மக்கள் பலியாயினர், பாவம் ", என்றும்,

 "உண்மையில் நடந்தது என்ன என்று  தெரியும் வரை யாரும்  உணர்ச்சிவயப்பட வேண்டாம்" என்றும்,

சில 'நடுநிலைக்' குரல்கள் மெதுவாக எழுந்தன. மக்கள் பேரணியின் ஊடே இயந்திர மற்றும் Sniper துப்பாக்கிகளும், சிறப்பு துணை ராணுவப் படையினரும், தலைகளில் சுடும் போர்க்கள  பாணி கொலை செயல்முறைகளும் ஏன், எப்படி, எப்போது முடிவு செய்யப்பட்டன என்று அவர்கள் ஏனோ கேட்கவில்லை.

பேரணி என்பது "'பேராலயத்தில்' கூடித் தொடங்கிய பேரணி" என மாறியபோது,
விளிம்பு கும்பல் என்பது "தேச விரோத கூட்டம்" என்றான பொது,
"144 அமலில் இருக்கையில் பேரணி நடத்தினால் வேறென்ன ஆகும் " என்றபோது ,
"இந்தத் தமிழ்ப் போராளிகளில் ஒருவர் கூட சாகவில்லையே" என்றபோது ,
"பாதிரிக்கு போராட்ட களத்தில் என்ன வேலை?" என காயமுற்ற நபர்  மதச்சாயமுற்றபொது,

... உண்மை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது.

இனி இவர்க்கு யாரும் சக மனிதன் இல்லை. பாதிக்கப்பட்டவன் இல்லை. ஒடுக்கப்பட்டவன் இல்லை. உரிமைப் போராட்டம் இல்லை. உயிர் பிச்சைக் கூட இல்லை.

எனக்கு உன் இருமைப் பார்வையில்  இரு நிலைதான்.
ஒன்று - உனக்குப் பின்னால் இருப்பவன்,
அல்லது - எங்குமே இல்லாமல் இருக்க  வேண்டியவன்.

நான் உன்  நண்பன் இல்லையென்றால், உனக்கு எதிரி .
உன் எதிரி என்றால், ஒரு தனி நபருக்கு எதிராகவோ, என் வாழ்வுரிமைக்காகவோ , ஏன் என் உயிருக்காகக்  கூட போராடினாலும் , நான் தேசவிரோதி, வாழத் தகுதியற்றவன்,
(என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதும் சுயநலம்தானே).

என் சிறு தவறுக்கும் , தவறென்று நீ நினைப்பதற்கும் நான் மடிய  வேண்டியவன்.

பசுவிற்கும், நாயிற்கும், மீனிற்கும் , இறக்கம் சொரியும் உன் மனம் எனக்காக இறங்காது.ஏனெனில் நான் உனக்குப் பிடிக்காத ஒரு நிலைப்பாடு  கொண்டுள்ளேன். உனக்கு ஒவ்வாத ஒரு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இன்னொன்றும் புரிந்தது, "தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறிவிடாமல் தடுக்கவே நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்" என்னும் அக்கறையான சொற்களை கேட்ட நொடியில்... காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது.. மிக நன்றாக புரிந்தது.
Saturday, August 05, 2017

தமிழ் அடையாளம்

தமிழ் அடையாளங்கள்: (ஒரு நண்பியின் தேவைக்காக இணையத்தில் இருந்து எடுத்து, கொஞ்சம் சொந்தக் கருத்துக்களையும்  புகுத்தி இட்ட கட்டுரை. மூலம் குறித்து வைக்காததால் இங்கே கொடுக்க முடியில்லை. அந்தந்த ஆசிரியர்களுக்கு நன்றி) 

அடையாளங்கள்:

அடையாளம் என்பது மற்றெல்லாவற்றில் இருந்தும் ஒன்றினை பிரித்துக் காட்டுவதாய் இருக்கலாம் அல்லது ஒரே போல் இருப்பவற்றை வேறு படுத்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்.

எல்லோரும் பல அடையாளங்களை சுமந்து கொண்டே வாழ்கிறோம், இடங்களுக்கும், காலங்களுக்கும், ஏவலுக்கும், பொருளுக்கும் ஏற்ப நம் பல அடையாளங்களில் சிலவற்றை பயன் படுத்துகிறோம். சிலவற்றால் அறியப்படுகிறோம்.


தமிழ்நாட்டில் - சென்னைவாசி , இந்தியாவில்- தமிழன், உலகில் -இந்தியன், 'இன்னாரின் மகள்',  'இன்னாரின் நண்பர்' , 'இன்ன வேலை செய்பவர்' ,   கூறிக்கொள்பவர் யார்? அவரின் அடையாளங்கள் என்ன?

தமிழ்:

தமிழ் என்பது மொழி மட்டுமல்ல. தமிழ் வாழ்க்கை , பக்தி, வழிபாடு, கல்வி, பண்பாடு , என எல்லாவற்றிலும் கலந்தே வரும் மொழி தாண்டிய அடையாளம்.

இதனால்தான் தமிழகத்தில்  பிறப்பவர், இருப்பவர், தமிழ் பேசுபவர், புலம் பெயர்ந்தவர், தமிழறியாத தமிழர், இவர்களில் யார் தமிழர்? மேலும் முக்கியமாக இவர்களை இணைக்கும் அடையாளம் எது?, எனும் கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் முக்கியம் பெறுகிறது

தமிழர்களின் உயிரோடு ஒன்றிப் போன சாதியப் பற்றும் வாழ்வோடு ஒன்றிப் போன சாதிய அடையாளங்களும் இதில் வேரூன்றி பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும், தமிழர் தம்மை, தமக்குள்ள ஜாதியைக் கொண்டே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

உண்மையில் உலக அரங்கில் தமிழின் முகவரியாக இலங்கையே இருக்கிறது. தமிழின் அடையாளமாக இலங்கைத் தமிழரே இருக்கின்றனர். இந்தியாவில் தமிழர் இருக்கின்றனர் என்பதே பல அயலவர்க்கு ஆச்சர்ய செய்தியாக உள்ளது.

புலம் பெயர் தேசங்களில்:

புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். 


இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும். 


தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள் சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும். இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழகத்திலோ, தமிழீழத்திலோ பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழ் மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. 

ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை அங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அங்கே தமிழ் அடையாளம் எவ்வாறு மாறு படப் போகிறது?

எடுத்துக்காட்டாக, பிஜி , ரீயூனியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை அடியோடு மறந்தாலும், பிற தமிழ் வழிபாட்டு, திருவழா முறைகளை  இன்றளவும் பின் பற்றி வருகின்றனர். 

அடையாளத்தின் எல்லை என்ன? அடையாளத்தின் வரையறை என்ன?


Saturday, May 13, 2017

மன்னார்குடி ஊஞ்சல்

இருள் எல்லாவற்றிலும் ஒரு மாயையை தந்து சேர்த்து விடுகிறது... மன்னார்குடி பயணம்  

Tuesday, March 28, 2017

கடவுள்

இயற்கையின் /இறையின் படைப்பில் பசி, காமம்(புணர்தல்/சந்ததி செய்தல்), தூக்கம், கழிவேற்றல் போன்ற உணர்வுகள் கடைசி மனிதன்-மனிதிவரை , ஏன் புழு-பூச்சி-கிருமி வரை பொதுவானதாக இருக்கின்றன,
ஆனால் உலகெங்கும் வழிபடப்படும் கடவுள்களும், அவர்களின் தொழுகை, பூஜை, நோன்பு, ஜெபம், என வழிபடும் வழிகளும், அவரின் மொழிகளும், எதுவுமே பொதுவானதாக இல்லை, எப்படி?
இந்த எல்லா மதங்களும் கடவுள்களும் சிறு சிறு பூகோள வட்டங்களுக்குள் பிறந்து பின்பே பரப்பபட்டு இருக்கின்றன. ஏன்?

பிறந்த கன்றிற்கு, தாயின் மடி யாரும் காட்டாமலே தெரியும் அந்த உணர்வைப் போல, ஒவ்வொரு உயிரும் தானாகவே படைத்தவனை உணர வேண்டாமா? தாமாக யாரும் உணராத கடவுள் எப்படிக் கடவுளாக இருக்க முடியும் ? உறக்கம் சுழற்றும் பொழுது கண்ணை மூட யாரும் கற்றுத்தர வேண்டி உள்ளதா?

பின், மிக மிக இயற்கையான இறைவனையும், அவரை வழிபடும் அவசியத்தையும், அவரின் வழிகளையும், ஏன் ஒரு குரு, ஒரு தூதர், ஒரு ஞானி, ஒரு பூசாரி நமக்கு கற்பிக்க வேண்டி உள்ளது?

இல்லை, படைத்தவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை, அவன், நாம் அவனை நம் அறிவால் உணர வேண்டும் என்றே இவ்வாறு படைத்தான் என்று கூறினால்.....

அவரவர் உணர்ந்து கொள்ள விடாமல், போதித்து, போதித்து வழி நடத்துவது இறைவன் மறைக்கு எதிர்மறையானதல்லவா?

Friday, September 18, 2015

Why Trisha illana Nayanthara may be a movie to hate, but is definitely a movie we need!Watched Trisha illana Nayanthara today. First day. It was a complete shocker. It is an out and out teenage/coming of age/romance/ sex comedy, a genre tamil cinema has not seen in a long time. Interestingly and incidentally I happened to watch Manmadhaleelai in Raj Tv a couple of days back and was wondering what happened to such films and to wherever sex comedies or honest adult themed films disappeared from tamil movie industry.

Now, I didn't like many things in/ about the movie. For one, I hated the regressive note throughout the movie brought out by the hero, that it is absolutely unacceptable for girls to drink and suggestions to women about 'asingamana' dressing and partying (but how it is okay for men to drink, party and do whatever) and how 'virginity' is an important necessity in love and how men who don't care if a girl is virgin are 'thiyagis' and how the film's hero claims he is not one such 'thiyagi' (read 'loser').

(Btw, to the director's credit,  the movie also shows the male lead to be a hypocrite who is himself a virgin only due to lack of opportunities and who would buy beer to a woman if it suits his cause.)

But these are the very reasons that make me feel so strongly about why we need  'Thrisha illana Nayanthara's more often.  With its cheap jokes, taboo themes and innuendos, the movie shocks some of us, makes some of us hide our faces, some shift in our seats, some of us cover our laughter, but makes all of us check the next seat after we let out that guilty chuckle. The very same things we Indians so righteously criticize, scorn and so refuse to enjoy - in public. This is very important.

We need these shocks from time to time to make the us, the Tamil/Indian audience break from the bluddy, Super Sensitive , Intolerant, mindsets we have developed through decades of being fed only carefully picked, culturally 'sensible' , chauvinistic stereotypes acceptable to our 'culture'.

For eg. like how  the heroine, even if portrayed a widow or divorcee should always be a virgin (either the guy she marries compulsorily  dies or gets separated before consummation of the marriage), or how the heroine can never get raped (by anyone other than the hero), and how there is never any actual talk on anything intimate like masturbation, or making out, or any other physical personal sexual activities. Even 'intercourse' is mentioned only if it somehow changes the course of the story, and how fancying luxury and wanting to make money (esp for female characters) is evil, etc.,

Feeding us with these same beaten ideas has made  us, the audience, insanely sensitive to anything else that we are not used too.  Which is why, the huge cries and outrages and hartals and violence when anybody says anything even remotely different from what we know, what we believe, what we like or  what we are ready to accept.

Come on, it has been 30 years since a #panneer pushpangal, #manmadhaleelai, #arangetram,  #vedham pudhidhu  or any such bold attempts. It has been 12-15 years since the last attempts at decent, honest coming of age / adult comedies like #boys or #thulluvadho ilamai.

More movies like Trisha illana Nayanthara, from time to time, will get the audience more used to themes that are in the shadow and make them more acceptable to cultural shocks and other taboo ideas which all of us may not agree with. And more such creative works, (Movies, Arts, Plays, Albums, Shows) will get us used to seeing, hearing, coming across things we don't feel okay about.

More movies with bold and shocking themes and content like Trisha illana Nayanthara, (not only sex comedies, but adult themes, religious criticisms, introspection on the society, alternate views on historical events or figures, etc.,) will actually distribute the outrage and over sensitivity of the audience and get people used to sensitive things being brought out in public. More importantly,understand people have the right to say what they want, and you may not always like what they want to say.

I do not know if the director realises the importance of his work. Heartfelt wishes to this game changing attempt.

#trishaillananayanthara, #adhikravi, #richardmnathan, #umeshjkumar

Wednesday, March 04, 2015

வயது 31. வினை 0.

எலி வளை...இல்லை...வலை..

எலி வளையானாலும் தனி வளை வேணும்... சரிதான் என்பதை இந்த அந்நிய நாட்டில், அந்நிய வீட்டில், அந்நிய இரவில் மீண்டும் உணர்கிறேன்...

Friday, January 09, 2015

விடு

யாக்கை உதறிவிட்டு
யானும் வான் பறந்து
பறவைப் பார்வையிலே
வாழ்வைப் பார்க்கயிலே

கவலைகள் அரிப்பதில்லை
கடவுள்கள் தடுப்பதில்லை
பொய்த்துணைத் தேடவில்லை 
மனப்-பேய்களும் ஆடவில்லை..

கொண்டது இழப்பதுவோ
கண்டது பிடிப்பதுவோ
நோய்ப் புண் துடிப்பதுவோ
எதுவும் மிடிமையில்ல..


வயிறும் நாக்குமில்லை
வன்மம் தொடர்வதில்லை
கதிர்-நிழல் கடவுமில்லை  
நாளைசெய் கடனுமில்லை..


ஒற்றை அச்சம் மட்டும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே...இக்-கவிதை  முடிக்கையிலே 
என் வாழ்க்கை  திரும்பிடுமே....

:-(


Saturday, October 11, 2014

Some of us are right..Some of us think we are better than others. We are a blessing in their lives. We get to live our dreams while others are here help us to it.

Some of us believe we are not that great. We have flaws that are bigger than anyone else, we need to make it right by living other people's lives over our own.

Some of us know that every food consumed becomes both blood and shit. Everybody is better and worse. We don't owe anybody anything and owe everybody a little to who we are.

Some of us are right.