என் நண்பன் தினேஷ் தான் கல்யாணம் செய்துகொள்ள போகும் (காதல்-) பெண்ணுக்கு எழுதிய ஒரு கவிதை. என்னை பயங்கரமாக impress செய்து விட்டது .
" மணி ஒன்னு,
நீ, நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு,
தூக்கம் இல்லாம எரியுது என் கண்ணு,
தயவு செய்ஞ்சு call பண்ணு "
இதை பார்க்க விளையாட்டாக 'கொலை வெறியாக ' இருக்கலாம்... அனால் என்னை பொறுத்த வரை ஒரு கவியின் (கவிதை + கவிஞன் ) ஆழம்- சுவை , எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் ஆழகாக கூறுகிறான் என்பதில்தான் இருக்கிறது.
அந்த வகையில் என் தமிழ் வகுப்பில் இரண்டு நாள் விளக்கம் நடத்தலாம் இந்த கவிதைக்கு.
-X -X -X -
தலைப்பே தேவை இல்லை... இரண்டாம் வரியிலேயே புரிந்து விடும் இந்த கவிதை எதை பற்றி என்ன, ஏது என்பது எல்லாமே.
மணி ஒன்னு.
தலைவன் தான் இருக்கும் நிலையை, காலத்தை, பொதுவாக உறக்கும் கண்களில் தவழ, கனவுகள் நெஞ்சில் சுவைக்க உலகமே உறங்கி கிடக்கும் வேளையில் , நான் விழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று தன் பசலையை கூறி விட்டான்...
நீ, நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு .
நீ யாரோ அல்ல, வெறுமனே கடலை வருக்க நினைக்கும் பெண்ண அல்ல. வேறு ஏதேதோ பெண்களிடம் நான் இதை எதிர்பார்க்க வில்லை. உரிமையோடு, என் மனைவி ஆகப் போகிற உன்னிடம்தான் என்னை அழைக்க வேண்டும், என்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.. என்று தனக்கு உள்ள உரிமையையும், தன்னை தொல்லை தருபவனாக தவறாக புரிந்து கொள்ள கூடாது அவள் என்ற கவலையிலும், கூறும் வார்த்தைகள்.
தூக்கம் இல்லாமல் எரியுது என் கண்ணு .
நன்பகல் ஒரு மணியோ, என்று யாரேனும் ஒரு குரும்புக்காரருக்கு ஐயம் இருந்தால் இந்த வரி அதனை நீக்கி இருக்கும். அது மட்டும் இன்றி தூக்கம் தனக்கு தேவை பட்டாலும், தன் உடல் , கண் ஆகியவை சோர்வில் ஏங்கினாலும் அதையும் மீறி என்னால் தூங்க முடியவில்லை உன் குரல் கேட்காமல், என்று தன் காதலின் அவஸ்த்தையை கூறுகிறான்.
தயவு செய்ஞ்சு call பண்ணு .
தன்னுடைய இந்த நிலைக்கு யார் காரணம்? ஏன் இவன் இந்த நிலையில் துயருற்று கிடக்கிறான்? கடன் தொல்லையா? cricket match -ஆ ? அதற்கு பதில்.. இந்த வரி. என்னை இந்த துயரங்களில் இருந்து காப்பாற்று, ஒரே ஒரு முறை என்னிடம் பேசி.. ஒரே ஒரு முறை தொலை பேசியில் உன் குரலை கேட்கவிட்டு.. உனக்காகத்தான் ,அதற்காத்தான் காத்திருக்கிறேன் என்று தன் ஏக்கத்தை கூறி முடிக்கிறான்.
-X-X-X-X-
இது எல்லாவற்றிற்கும் மேல், இந்த ட்விட்டர் உலகில், 140 எழுத்துகளுக்குள் இத்தனை உணர்ச்சியையும், செய்தியையும் கூறி விட்டான்... இப்பொழுது சொல்லுங்கள்..
"mani onnu, nee,
naan kalyanam pannapora ponnu,
thookam illaama eriyudhu en kannu,
thayavuseinju call pannu."
அடா.. அடா...