Thursday, May 21, 2009

தமிழா...

ஈழம்-வெல்லும் நாள்
தூரம் செல்லலாம் ..
சோழன் கொடி பறக்க
வேலை தள்ளலாம்...

மரணம்தனைக் கண்டு
மனமும் கலங்கலாம்
சூது- இருள் கவிழ்த்து
இரங்கல் பாடலாம்...

ஆனால்,
இரவினைக் கிழித்து
வான்தனை எரித்து
மறைந்த ஆதவன்
உதயம் ஆவான்...

செத்து மடிந்தவன்
வித்தாய் மாறி- நம்
இரத்தம் சதையில்
சித்தம் மீள்வான்..

புயல் போல் மீண்டும்
யுத்தம் தொடங்கும்
தமிழா! என்றவன்
குரல் வான் ஒலிக்கும்...

அந்நொடி வரை நீ
பொறுத்திரு அனலாய்
உன்நொடியும் வரும்
துடித்திரு தமிழா...!