Tuesday, November 23, 2010

சென்ற வார உலகம்.

சென்ற வாரம் ஒளியின் வீர வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மங்களூரு சென்று மீண்டும் சென்னைப் பயணம். மோட்டார் சைக்கிளில்.
இரண்டு நாட்களில்.

காலையில் வங்கக் கடலில் கண்டு புறப்பட்டு, அரபிக் கடலில் அஸ்தமனம் பார்ப்பதாக சூளுரைத்து கிளம்பினோம். கிளம்பினோம்.. சென்று திரும்ப இடையில் 1711 கிலோ மீட்டர்கள்.

பயணக் கட்டுரையல்ல இது. இந்த பயணம்-இப்படி ஒரு பயணம் தேவையா? என்பது பலரின் கேள்வியை இருந்தது. பெங்களூரில் நண்பர்களை பார்த்தாயா? மங்களூரில் இந்த இடம், அந்த இடம் எல்லாம் பார்த்தாயா? என்ற கேள்விகளுக்கு, நேரமே இல்லை, முதல் நாள் காலை நான்கு மணிக்கு கெளம்பி, மறுநாள் காலை நான்கு மணிக்கு மங்களூர் அடைந்து, அங்கிருந்து மீண்டும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டு விட்டோம் என்று பதில் அளிக்கையில், ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்டது போலவும், செழிப்பான மனோ நிலை இல்லாதவரிடம் பெசுவட்து போலவும் அவர்கள் பேசியது நகைக்க வைத்தது.

உண்மை. எதற்காக உடலையும், மனதையும் இப்படி வருத்திக்கொண்டு ஒரு பயணம்? முடி பட ஆயிரம் வேலைகள் இங்கிருக்கையில், இது என்ன?
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் பிடி பட வில்லை. ஒரு அரை கூவல். அதற்கு எங்கள் பதில் - இந்த பயணம்.

புதிய மனிதர்களை சந்திக்க ஓர் வாய்ப்பு. உடலும் மனமும் எவ்வளவு தாங்கும் எனக் வளைத்துப் பார்க்கும் ஆசை. இந்த வயதில் செய்யாவிடில் பின்னெப்போது, எனும் எண்ணம்.

இந்த பயணத்தின் பலன்கள், எந்த புறநானூற்று வீரனையும் வலியும் பொறாமையும் கொள்ள செய்யும் இரு விழுப் புண்கள். பல அனுபவங்கள். சில நண்பர்கள். எச்சரிக்கை. முதிர்ச்சி.

கோபிகா திருமணம். நானும் தவுலத்தும் இனைந்து பங்கேற்கும்.. இரண்டாவது திருமணம் என்று நினைக்கிறேன். முதல்- ஹாஜிராவின் உடையது - இரண்டரை ஆண்டுகளுக்கு முன்.

செங்கல்பட்டில் கோபிகா மணமக்களை வாழ்த்திவிட்டு, அப்படியே ஒரே மூச்சாக, திருவான்மியூரில் மஞ்சுநாதன் திருமண விழாவிலும் கலந்து சாதனை படைத்தேன். :-) ஒரே வீச்சில் மங்களூரு சென்று திரும்பியதை விடவும் இது எனக்கு அதிக மகிழ்ச்சி.

காலில் கட்டு. ப்றேயானத்தின் பொது ஏற்பட்ட விழுப்புண் தானை மாறும், ஆறும் என்ற ஒரு வார காத்திருப்புக்கு பின், கடைசியாய் அப்பாவிடம் காட்டிவிட்டேன். 5 மாத்திரைகள், முழு ஓய்வு, காலில் 'crepe bandage' எனப்படும் சுளுக்கு கட்டு ஒரு வாரத்திற்கு என்று அவர் தன் 'மருத்துவ' குணத்தை காட்டி விட்டார். :-(

இதற்குத்தான் நான் மருத்துவர்களை அன்டுவதுமில்லை , அன்ட விடுவதுமில்லை .

ஆனால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். போய்க்கொண்டே இருக்கும். இன்று இரவு இப்பதிவை தொடர்கிறேன்.. அதுவரை... விடை கொடு நண்ப.