"
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும், மனதர் ஆகினோம்.. மனிதர் ஆகினோம் மனப் பாதையில் தினம் ஓடினோம், அதன் ஆசையில் நூலாடினோம், பாதை தேடினோம். விரதமும் இட்டு வாடினோம், கடவுளும் சற்று சாடினோம், ஏது குழம்பினோம். தினம் தேதிகள் அவை மாறிடும், ஆண்டுகள் உருண்டோடிடும், வயது கூடிடும். சக மனிதனின் ரணம் ஆற்றி நாம் சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம் நாட்கள் நிரப்புவோம் வெறும் தேதிகள் என்றாகிடா, கண் திறக்குமுன் ஓடிடா புத்தாண்டு வாழ்த்துக்கள்! |