கல்லூரிக் கவிதைகள்...
உயிர்..
தீ குளித்தும் தேகம் வேகவில்லை,
உன் நினைவினில் என்னை நனைத்துக்கொண்டேன்..
மூழ்கடித்தும் நான் சாகவில்லை,
உன் கனவுகள் தானே சுவாசிக்கிறேன்..
நெஞ்சில் -வாள் பதித்தும் உயிர் போகவில்லை,
என் இதயம் என்றோ இழந்துவிட்டேன்..
இப்படி உயிர் பிடித்து உன்னை தேடி வந்தேன்,
பெண்ணே -
நொடியில் - முகம் மறுத்து என்னைச் சாகடித்தாய்...
கவிதைப் போட்டி..
வருடங்களாய் புதைத்த சோகம்,
யுகங்களாய் நீண்ட காதல்,
நிமிடங்களில் தங்கிய நினைவுகள்,
நாளை சுமக்கும் கனவுகள்,-
எல்லாம் செதுக்கிச் செதுக்கி கவிதை வடித்தேன்...
அரை நிமிடத்தில் அலசி விட்டாராம்-!
கவிதை கசங்கி காகிதம் ஆனது...
2 comments:
hahaha...ippothanda ida pathen...
:D.....nice kuttu for all d critics..
n uyir...:D....
Post a Comment