கிறுக்கல் வலைப்பதிவு. சுஜாதாவைப் பற்றி படிக்கின்ற பொழுதெல்லாம் மனதில் ஒரு கணம் ஒரு கனம். அந்த அழுகை வெளியே வந்து விட்டால் நல்லது என்று தோன்றுகிறது.
என்னை விட சுஜாதாவை complan போல் கரைத்து குடித்து, horlicks போல் அப்படியே சாப்பிட்டு இன்னுமும் கேட்கும் வாசகர்கள்/ ரசிகர்கள் பல ஆயிரம் இருப்பார்கள். தெரியும் . இருந்தாலும் இந்த சின்ன ரசிகனுக்கும் பெரிய வலி தான்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரை பார்த்து விட வேண்டும், பேசி விட வேண்டும் என்று ஆசைப் பட்டுக்கொன்டிருந்தேன்.. இனி ஏக்கப்பட்டுக்கொண்டிருப்பேன் .
"....'ஒளி' நல்ல தமிழ் பேர்யா " என்று அவர் கூறுவதாக அவ்வப்பொழுது நினைத்துகொள்வேன்.
குமுதத்தில் சுஜாதா நினைவுகள் படித்த ஒவ்வொரு வாரமும் இதே நிலை தான். சுஜாதாவைப் போல் ஒரு எழுத்தாளனை "some people are just born great" என்ற category இல் தான் வைக்க வேண்டும், because there is no other explanation.
இதை போன்ற எழுத்துக்களை அவருக்கு யாரேனும் சொல்லித்தந்தார்கள் என்றால் கடவுள் மீது எனக்குள்ள நம்பிக்கை போய்விடும்.
3 comments:
machan. awesome da. "oru ganam.. oru gaNam".. very good machan :)
இதை போன்ற எழுத்துக்களை அவருக்கு யாரேனும் சொல்லித்தந்தார்கள் என்றால் கடவுள் மீது எனக்குள்ள நம்பிக்கை போய்விடும். pattasu da mama..
:) un elutha parthalum... azhagana tamil nu sujatha solli iruparu da!
Post a Comment