Sunday, January 09, 2011

இந்த வாரம்..

ஈரோடு பயணம். இந்த வாரம் சினேகாவின் திருமண வரவேற்பு ஈரோட்டில். வழக்கம் போல் நானும் திநேசனும்(தினேஷ் ) சூறாவளியாக காலையில் புறப்பட்டு, மாலையில் ஈரோடடைந்து , விழாவை சிறப்பித்து(!!??), இரவே திரும்பி சென்னை அடைந்தோம். :-)

சினேகாவை இதுவரை இரண்டே முறைதான் நேரில் சந்தித்தி இருக்கிறோம். தொலைபேசியில் சில முறைகள் கதைத்திருப்போம். அவ்வளவுதான்.
இரண்டே திருகில், திறக்க முடியாமல் இறுகி விடும் ஜாடி-மூடி போல, எங்கள் நட்பானது இறுகி விட்டது ஆச்சர்யம்.

இரயிலில் நல்ல தூக்கம். ஈரோடு இரயில் நிலையம் புருவம் உயரும் அளவிற்கு துப்புரவாக இருந்தது. 'ஒரு மணி நேரமாய் இரண்டாம் பிளாட்பாரம் , வெஸ்ட் சைடுல , தண்ணி வழியுது.. யாரும் பைகளை, பொய் உடனே பார்க்கவும்' என்று பயணிகள் தகவல் ஒலிபெருக்கியில் அக்கறையோடு அறிவிப்பு வந்தது அதை விட ஆச்சர்யம்.

இங்கே சென்னையில், ஒரு நாள் முழுக்க நீர்போக்கு இருந்தாலும், ஒரு நாயும்கூட நின்று பார்க்காது. தண்ணீர் தானாக தீர்ந்து, நீர்த்து போனால்தான் உண்டு.

கடலை என்னை lorry கவிழ்ந்தால் மட்டும் எப்படி 5 நிமிடத்தில் ஒட்டு மொத்த ஊரும் வந்து bucket-ஓடு முண்டி அடிக்கிறது என்று தெரியவில்லை. செய்தி 5 நிமிடத்தில் எட்டுவதே நினைத்துப் பார்க்க முடியவில்லை, அதற்குள் எங்கே இருந்து bucket, குடம் எல்லாம் கிடைத்து, வந்தும் சேர்ந்து விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னை எக்மோர் இரயில் நிலையம் உலகிலேயே வயசாளிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், கொஞ்சம் கூட அனுசரணையே இல்லாத இரயில் நிலையம்.

பேருக்கு ஒரு மின் படி.. ஒரு பிளாட்பார்மில் ஏறுவதற்கு மட்டும், இன்னொரு பிளாட்பார்மில் இருந்குவதர்க்கு மட்டும். அங்கே ஏறியவர் இங்க இறங்க வேண்டும் என்றால்? :-o

முடியாதோர்க்கு ஒரு ஊர்தி, அது முதல் இரண்டு பிளாட்போர்மில் மட்டும்தான் இயங்குமாம்.

சக்கர நாற்காலி இலவசம், ஆனால் அதை தள்ளுவதற்கு 200 தள்ள வேண்டும் போர்ட்டருக்கு . ஏன் என்றால் சர்க்கார நாற்காலி தள்ளவும் இடம் கிடையாது, ஒரு கோடியில் இருந்து மறு கோடி சென்று ஒவ்வொரு முறையும் 'திருச்சு' வர வேண்டும். ( இதில் நடு நடுவே தூக்கி இறக்கி, எழுந்து, கடந்து... ஸ்ஸ்ஸ் ....)

பத்து இடங்களில் நுழையலாம், ஆனால் பிளாட்பாரம் சீட்டு ஒரே ஒரு இடத்தில் தான் கிடைக்கும்.

உடல் ஊனமுற்றோரும், வயசாளிகளும், ஒவ்வொரு முறையும் படும் பாட்டை பார்த்து கொலை வெறி தோன்றினாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் ஒரு உணர்ச்சியும் தோன்ற மாட்டேன் என்கிறது?

No comments: