Zero Motivation. Days with absolutely Zero productivity. At a time when I need to be running on all fours. Gawd. Save. Me.
Tuesday, June 25, 2013
Monday, May 20, 2013
ஆசை முகம் மறக்கலாகுமோ?
பேசு மொழி மறந்து போகுமோ?
நேச மனம் தந்து நுழைந்தபின்
நெஞ்சு கிழித்தெறிதல் நியாயமோ?
--
எந்தன் கூண்டு என் வாழ்க்கை
உந்தன் வான் உந்தன் வேட்கை
காதல் கொண்ட உந்தன் பாவம்
கூண்டிலோ வானம் தொலைக்கலாகும்?
கொஞ்சி பேசி கழித்ததன்றி
வஞ்சிக்கு வேறு தந்ததில்லை
நெஞ்சத்தை நம்பி தந்ததற்கு
மிஞ்சிட்ட வாழ்க்கை பாழ் செய்யலாமோ ?
--
Wednesday, February 13, 2013
Catching up...
நன்மைகள் யாவும்
நம்மையே சேர..
வெகுநாட்களாக பதிவுகள் இட வேண்டும் வேண்டும் வேண்டும் என்று இருந்தும் முழுக்க முழுக்க சோம்பேறித்தனத்தினால் கடத்திக்கொண்டு இருந்தேன். இன்று 'ழ கபேயில் 'டியூடி' ;-) அக்காவின் காபிக் கடையில் வேலை ஆட்கள் குறைபாட்டினால் நான் இன்று இங்கு அமர்த்தபட்டிருக்கிறேன்.. எனக்கு பிடித்தமான வேலை... புதுப் புது மக்களை பார்ப்பது, பழகுவது மகிழ்விப்பது, எல்லாம் எனக்கு பிடித்த விஷயங்கள்...
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று இந்த பதிவை தொடர்கிறேன். சில விடயங்கள் சொல்ல வேண்டும்... சில செய்ய... எனது சாதாரண வாழ்கையை நானாகவே சிக்கலாக்கி கொள்வதில் நான் கரை கடந்துவிட்டேன்.. நன்றாக போய்க்கொண்டிருக்கும் பொழுது புதிதாக நானே எனக்கு 'வேலியில் போகும் ஓணான் ' வகையறா பிரச்சனைகளை எங்கெங்கோ விட்டுக்கொள்கிறேன்...
1984-இல் பிறந்து அடுத்த மாதத்தோடு 29 ஆண்டுகள் பறந்துவிட்டன. அகவை முப்பதில் அடி வைப்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது...
ஆனால் யோசிக்க பயமாய் இருக்கிறது...

Friday, January 11, 2013
(நானும்) நின்னைச் சரணடைந்தேன்....
காலை எழுந்தவுடன் FB ,
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,
வேலை முழுவதிலும் OB ,
வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,
இப்படி வாழ்ந்திடும் பாவி,
இவனை நீதான் காக்கணும் தேவி!!
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,
வேலை முழுவதிலும் OB ,
வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,
இப்படி வாழ்ந்திடும் பாவி,
இவனை நீதான் காக்கணும் தேவி!!
Tuesday, January 01, 2013
புத்தாண்டு வாழ்த்துக்கள்!- 2013
வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
'மனதர்' ஆகினோம்..
மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.
விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.
தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.
சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்
வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
'மனதர்' ஆகினோம்..
மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.
விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.
தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.
சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்
வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Subscribe to:
Posts (Atom)