Monday, December 14, 2009

என் கிராமம்..

அதிகாலை ரயிலின் அரைநிமிட
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..

கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..

ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..

பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..

ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...


6 comments:

Dhou said...

Hi,
Kavithai super... ithayum suttu en blog la updata pannidatuma? :)

Sugirtha said...

நன்றி Li! தேடும்போது எல்லாமே கிடைச்சுடாது. அதனால தேடியபோது கிடைச்ச உங்க வருகை எனக்கும் நிறைய சந்தோசமா இருக்கு Li! :)

இப்போ உங்க கவிதைப் பற்றி...

நேற்றைய காட்சியையும், இன்றைய நிஜத்தையும் கவிதை கண் முன் கொண்டு வருகிறது.

பின் வரும் வரிகளை மிக ரசித்தேன்.

//கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள்....
....
ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...//

அப்றோம்
ஒரு இனிமையான உணர்வைப் படிக்கும்போது ஆங்கில வார்த்தைகள் கொஞ்சம் இடைஞ்சலா இருக்கு. மனசு நினைச்சத அப்படியே சொல்லிட்டேன். காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க

Li. said...

@iniya sugirtha

மிக்க நன்றி . நீங்கள் பாராட்டும் அளவுக்கு இது நல்லா இருக்கான்னு எனக்கே தெரியலை.. :-)

அந்த 'இடைஞ்சல்' கவிதையில் வரக்காரணம் , வாழ்க்கையிலும் வருவது தான் ... இன்றைய நிலையினை விவரிக்கும் இடங்களில்தான் ஆங்கிலம் புகுத்தி இருக்கிறேன் என்பதை கவனிக்கலாம் ... வேண்டும் என்றே செய்த பிழை .. இருந்தாலும் மீண்டும் எழுதுகையில் அழகு தமிழ் மட்டும் பயன்படுத்த முயற்சிப்பேன் ..

Li. said...

@ kosu

நேர்லயே சொல்லிட்டேன் , இருந்தாலும் சொல்றேன் .. கடிக்கிறது கொசுவோட வேலை ,
சுடுறது தௌவோட வேலை .. கடமையை செய் ...

mathews said...
This comment has been removed by a blog administrator.
aarthi said...

nandru- *****( stars)

:)