Saturday, July 03, 2010

உலகம்.

--



இரவுகள் நீண்டு , விடியல்கள் தீர்ந்து , நீரெலாம் உறைந்து,
உயிரெல்லாம் ஓய்ந்து, கடவுள்கள் சாய்ந்துபோன உலகம் .

கோடியாண்டுகளில் யாருமே கேட்டிராத அமைதி.
கரிய வானம். ஜொலிக்கும் நட்சத்திரங்கள் .

இவற்றை வர்ணிக்கக் கூட எவரும் இல்லை.

கரப்பான் பூச்சிகள்கூட தீர்ந்து விட்டன.

அகழ்வுகள் கூறும் கதை கேட்கவும் யாருமில்லை.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் ,
உலகில் மானுடம் பார்த்த, கேட்ட, உணர்ந்த ஒட்டு மொத்த அறிவும் கோடிக்கணக்கான நூல்களாய், தகடுகளாய், பேழைகளாய் படிக்க எவருமற்று கிடக்கின்றன.

இனியும் என்றும் எவரும் பயனுற போவதில்லை.

பணம் , வைரம், தங்கம், காணி, கடவுள், இன்னும் மனிதன்
துரத்தியவை, துடித்தவை, படைத்தவை எல்லாம் அர்த்தமற்றவையாய் கிடக்கின்றன .

காற்று, இல்லை. அசைவு, இல்லை. காலம், இல்லை. மாற்றம், இல்லை.

விழிப்பில் அம்மாவைக் தேடி ஓடினேன்.

3 comments:

Alin said...

hey, poetic a iruku
very nice!

Li. said...

@ Snakes: நன்றி ஹை. 'poetic '-ஆ இருக்கணும்னு try பண்ணி எழுதுனேன்.. :-p

Anonymous said...

fine