என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...
--
வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..
--
ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.
--
புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.
--
பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.
7 comments:
//வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..//
Good One.... வானம் தொட்டு விடும் தூரம் தான்... வைரமுத்துவின் புத்தகத்தை ஞாபகபடுத்தியது :)
கண்டிப்பா வைரமுத்து தாக்கம்தான். சொல்ல முடியாது, அந்த டையரியில நான் அவர் வரியா கூட கிறுக்கு வெச்சிருக்கலாம்.. அந்த காலத்துல அவர் போதையில தான எப்பவும் கெடப்போம்...
எதிர் கவிதை எழுதனும்னு தோணது..:)
1. முதல் கவிதை உங்க ஸ்பெஷல் போல.. :)
2. ம்ம்ம் வீட்டில் இல்லாம வெட்ட வெளியில இருந்தா?
3. மக்கு பாப்பா போல.. :)
4. இந்த புத்தர் இருக்காறே அவரை கண்டாவே எனக்கு ஆகறது இல்ல..
சரி, அதை தனியா சொல்றேன்.. .
புது பொலிவுடன் - ஒளி..:)
டெம்ளேட் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேன். .ஆனா முன்ன இருந்த டெம்ளேட் மறந்து போச்சி...
Took time but you did it.. :) Guess I could go for my next request..
@kavitha
1. ஆமாம் .
2. வெட்ட வெளியிலும் ஜன்னல் கம்பிகள் இருக்கின்றன.
3 . ஆம். இன்னும் 15 வருடத்தில் அதுவும் ஒரு மக்கு பாப்பா.
4 . சொல்லுங்க.
5 . பின்னூட்டங்களுக்கு நன்றி.
6 . (கவிதை சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது என்பதை கூறி முடித்துக்கொள்கிறேன் !)
7 . இதெல்லாம் எதிர் கவிதையா? இல்ல அது தனிய வருதா? :-p
கவிதை குட்டியா இருந்தாலும் சரக்கு கெட்டி தான்
Super liked all of them!
Post a Comment