கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,
வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -
என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,
மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...
விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,
அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,
என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,
வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...
6 comments:
Why Blood... Same Blood !
:-/ அப்டினா ?
போகாமயே சுபமாகவா முடிஞ்சுது? ;)
மறுபடியும் முயற்சி பண்ணுங்க... ஏன்னா வாழ்கையில இத மிஸ் பண்ணக் கூடாது... :))
/வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை /
@Sugirtha: போனா என்ன கேடச்சிருக்குமோ தெரியலை.. போகாததுனால ஒரு கவிதை கெடச்சுது.....ரொம்ப நாள் கழிச்சு ... அதனால சுபம்! :-)
Nice to see that you are back.. I suggest you continue the same.. :)
-Ish.
Arambame super-athi kalai and cofee
என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,- impressive
வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்... puriyale...
போனா என்ன கேடச்சிருக்குமோ தெரியலை.. போகாததுனால ஒரு கவிதை கெடச்சுது.....Kalakita da....
Post a Comment