Thursday, May 26, 2011
அமுது, அமுதன், பேபி, தாத்தா, stara, zuzu, அருள், அருள் குணாளன் என்ற நாமகரனங்களால் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நிலங்களில், அழைக்கப்பட்ட/அழைக்கப்படும் என் ஆசை மச்சானின் ஒரு சமீப முகநூல் (அதானுங்க, 'facebook') மனநிலை வாக்கியம் (status message) - 'கௌரவ வாக்கியம்னு' போடலாம்னு பார்த்தேன்...பின்ன... 'status'-naa கெளரவம்தானே ...but...வேணாம் ....
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த வாக்கியத்தில் உள்ள உண்மை என்னை பொளேர் என்று அரைகிறது... எனக்கு மட்டுமல்ல... என்னை சுற்றி, எனக்கு அருகில், என்னை விலகி, நான் அறியா, எனை அறிந்த .. எல்லா மனிதரின் வாழ்க்கையையும் / மன நிலையையும் பளிச்சென்று படம் பிடித்த இரட்டை வரி..
காரணம் இல்லா... காரணம் புரியா... தேடல் தீர்ந்த... தேடல் தெரியா... pointlessness in life....
எதற்கு எழுகிறேன்... எதை நோக்கி ஓடுகிறேன்... எதை அடைவேன்... ஏன் அதை தேடுகிறேன்... தெரியவில்லை...
அனால் பொழுது விடிந்து விட்டது.... எழ வேண்டும்... ஏன் என்றால் உலகம் எழுகிறது... நீயும் எழ வேண்டும்...
சரி...எழுகிறேன்...
உன் வயதுக்காரர்கள் பணம் தேடுகிறார்கள்..
சரி... நானும் தேடுகிறேன்...
கல்யாண வயது (??!!) அடைந்து விட்டாய்...
சரி மனமேடை சேர்கிறேன்...
நான்கு வருடங்கள் ஒரே வேலையிலா இருக்கிறாய் ???
சரி இருக்கும் வேலையை விட்டு விட்டு இரெக்கை தேடுகிறேன்...
ஆனால் உண்மையில் எனக்கு என்ன வேண்டும்...? எனக்கு எது மகிழ்வு?? நான் எழ காரணமில்லா நாட்கள் இருக்கவே கூடாதா?
எனக்கு எழ பிடிக்கவில்லை ....
எனக்கு இன்று உண்ண , உடுத்த பணம் இருக்கிறது... பணம் தெவை படுகையில் எழுந்து உழைத்துக் கொள்கிறேன்..
எனக்கு இருக்கும் வேலையே போதும்... இன்னொரு சில லட்சத்திற்காக பாழூர் வரை தினம் சென்று வெந்து (ஆமாம் வெந்து தான் )வர எனக்கு அவசியம் இல்லை...
எனக்கு திரு'மணம்' செல்லவில்லை... நாற்பதில் துணை தேவைப்பட்டால் நாற்பதில் தேடிக்கொள்கிறேன்...
எனக்கு எழ காரணமில்லை...விடுங்களேன்... please......
பி .கு . இனியாவின் இந்த பதிவின் - http://iniyasnehidhi.blogspot.com/2008/12/mozhiyil.html , எனது தினப் போலம்பல்களின் , கோடான கொடி மானிடப் பதர்களின் வாழ்கையின் ரத்தின (உண்மையிலேயே) சுருக்கம்தான் அமுதனின் அவ்விரு வரிகள்....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
naangellaam ottamaa odittirukkumbodhu nee mattum eppadi thoongalaam? apdinnu kekka ninaichaalum enakku nijamaave thoongaravangala ezhuppa pidikkadhu. yenna appavaachum paavam nimmadhiyaa irukkattumennu dhaan. adhanaala nee thoongu thoongu. naanga ezhuppala. aanaa onnu mattum kekkanum, appadiye side gap la kalyana vayasu vandhuduchunnu vera solliyachu...:))smart dhanppa nee...naan yedhachu recommend pannavaa?
ஹஹா ... ;-) இந்த பதிவும் என்னோட ஏக்கம் மட்டும்தான்... நானும் தினமும் எழுந்து ஓடிகிட்டு தான் இருக்கேன்... :-)
கல்யாண வயசு..... அது சரி, ஆனா நான் கல்யாணம் வேணாம்னு தானே சொல்ல வந்தேன்... anyways, சுகிர்தா recommend பண்ணா , நான் வேணாம்னா சொல்ல
போறேன் ....!! waiting!! :-) :-)
mm, keep waiting :-))
nice one oli..
ஆனால் ௨ண்மையில் எனக்கு என்ன வேண்டும்...?எனக்கு எது மகிழ்வு??....
இதற்கு ஆன பதில் தெரிவதற்கு முன்பே,உலகம் என்னை வேகமாக செல் என்கிறது...என்ன வேண்டும் என்று தெரியாமல் முடிவு எடுப்பது எப்படி....
This is my life . Let me decide...
Post a Comment