".....மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ ?"
கொஞ்சம் துயரம் என்றால் -சொல்லில்
கொட்டித் தீர்த்திடலாம் , இந்த
நெஞ்சம் பிளக்கும் வலி சொல்ல -
சொல்லில் என் தமிழில்..
உண்னை மரணம் பிரிக்கும் கனா
கண்டு துடித்து துவண்டதுண்டு ..
உன் மணனம் பிரிக்கும் என
கண நொடியும் நினைக்கவில்லை...
சிந்தையில் தெளிவுமில்லை இன்று-
அன்னம் தின்னவும் தோன்றவில்லை
மந்தையை தொலைத்த கன்றாய் - நின்று
திக்கற்று புலம்புகிறேன்.
உண்னை சந்தித்த தேதி முதல்
என்னை என்றைக்கும் மாற்றிவிட்டாய்,
பின் என்னை சந்தித்த மனிதரெல்லாம்
சந்தித்த துன்னையன்றோ?
கிஞ்சிற்றும் மாற்றமில்லை- என்
வாழ்காலம் உன்னோடுதான்.
விஞ்சிட்ட நாட்களெல்லாம் உன்
முகம் சிந்தித்து கொன்றிடுவேன்.
MyHeartMyMind
Just spend some time inside - My Heart.. n My Mind...
Monday, January 16, 2012
Saturday, December 10, 2011
பயணப் பக்கங்கள்- மதுரை
சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.
இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.
சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.
SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.
கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).
வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.
TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.
ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.
மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.
அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"
இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.
மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .
நடுவில் எங்கோ ஒரு பத்தி,
'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'
என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.
அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.
மதுரை மாநகர்.
| Reactions: |
Wednesday, November 30, 2011
Observations....
Okay, after a long time, got in touch with a school friend. Thanks to Facebook. :-p
A girl. A psychologist now. This was the one of the very first chats we had...Probably the second or third. And the observations she made were amazing. Just felt I should record this. It is a great feeling when people assess you, and give you clarity. At the end of it, please do let me know what you think about me/these observations.
I have deleted parts of the conversation that are irrelevant to the readers. :-) Please have patience, if not, just run through the coloured stuff (Baaaaaad colour choice, I know :-/ :-p) anways, c u at the end of the read. b4n.
Friend: but then thats the point la
u dont let every one into that
exclusively private space that is so delicate and tender
17:55 u cant not everyone wud care enuf to
tread carefully
n the point is sarcasm is a mask
n i think u may be quiet a sensitive
and soft guy deep down
u know
me: :-)
am soft even outtside
:-p
but bluddy guys call it baby fat
17:56 Friend: see this is exactly it
me: :-p
wattodo
enna exactly
Friend: that how u knw i was right
n yet it was so hard for u to just
accept it
u had to bring sarcasm in
me: ya
that's wat u do
when somebody touches a softspot
17:57 u laugh it
n get away
Friend: precisely
me: :-)
Friend: coz its hard to stay with it
n to accept some people can understnd
us
the fear to let anyone in
natural
but jus saying
thats how we operate
so do i
me: ya..but sometimes, dat's just polite to joke
when ppl say nice things aba u
;-)
17:58 pugalchi
Friend: u dont have to man
me: pidikaaaaadhu
Friend: this is not pugalchi dude
its just an observation
which may be right or wrong
me: excuse me, "deep down ur a sensitive
soft guy"
is not a nice thing to say about me?
17:59 Friend: it is pugalchi u idiot fellow
it is nothign but the truth
it doesnt have to be praise
me: hmm
Friend: i'll tell u
me: seri vidu... u r right
Friend: wat u r like
me: ok
temme
Friend: i jus have this image of u
me: ok
Friend: u can tell me if i am wrong
me: i'll try to be honesst
Friend: deal
18:01 u r actually smart but lazyy
n people around u think they know u
like u r this transparent person that
they know so well
18:02 n almost the kinda person who has many
close friends
n every one of them thinks they know u
so well
me: hmm
Friend: and take a lot of right in sayin it
or claiming it
me: :-)
hmm...
18:03 yes.
Friend: bt what none of them know is there
is this absolutely delicate side that not one of them knows about
they probably think ur poetry is
talent
and u get away with saying it too
sometimes mebbe u agree u really feel
it
but deep down that is a soulful
expression of who u r
18:04 u have never really yet trusted anyone
to be urself comepletely
me: hmm
18:05 Friend: n yes ur sense of humour n sarcasm
although quite mokkai
n sometimes good
is like ur karnana's kavasam
u know
go on
me: agreed
18:06 i express anger through my sarcasm
when i can't shout
or fight
which i think is a sign of weakness
Friend: im not sure it is weakness
18:07 n i think u rarely trsut anyone to be
able to handle it so u let it be
n yeah mostly nice to all people
even wen u may not think highly of
them
18:08 i feel u havent yet made enuf frnds
with people who u can connect wid deep down
u know they r all nice people but
wudnt get it if u said some of ur ideas or views
me: hey
Friend: sollu
me: is this like all from 2 weeks of on n off
chat
???
Friend: y
yep
me: my gawd ur gud
18:09 Friend: this is the energy i get from u
dont freak ot when i say this
people often do
me: am scared...or is this like this horoscope
coloumn that kinda fits all?
hmm
Friend: i just closed my eyes n tried to
understnd u
this is wat i get
18:32 Friend:
one last kaelvi
i feel i am gonna get this wrng
18:33 did u drink quite heavy in the past n
decide to stop?
me: nope
but i decided to stop
Friend: see i knew i was gonna get it wrng
me: i was not even a big fan of drinks,
but once i started off
in full glory
18:34 Friend: exactlyy
kewl
i was right then
yeahhhhhhhhhhhhhhhh
me: but quickly swore neva to drink
Friend: exactlyy
it did freak u out
me: haha
:-) itwas amazing
Friend: meaning that u can get out of
control
me: nope
18:35 we had an incident
life shaker
Friend: hmm
me: n i decided i wont
Friend: i cud sense it
me: okies
but really
dis cant be guess
me: if it is true, ur awesome
Friend: yes byeee
me: ;-)
Friend: dNX;)
BYEEEE
So, you know me.....how much of these 'Observations' do you think are right? :-)
| Reactions: |
Tuesday, November 29, 2011
வலைப்பூ-2
அழைத்தேன்... "மச்சி, எனக்கு ஒரு அர்த்தம் தெரிஞ்சாகனும் " என்று முதல் மரியாதை கிழவன் கணக்காக தொடங்கினான்... அய்யயோ, இன்று செய்தளித்த presentation -இல் ஏதோ சொதப்பல் போல என்று எண்ணியபடியே "என்ன மச்சி, சொல்லுடா", என்றதும்...
"தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா , அது மானாபிமானங்களை காக்குமா ?!!!" என்று உரத்த குரலில் பாட தொடங்கி விட்டான்... "மச்சி, இந்த lines- க்கு விளக்கம் வேணும்டா " என்றான்.. :-)
ஆமாம்...இதே ஆச்சர்யம்தான் எனக்கும்... சீதனம், மான/ அபிமானம் எல்லாத்திற்கும் ஒவ்வொன்றாய் விளக்க... "மச்சி, சூப்பர்-டா... அவன் *&^%%$$@# டா அவன்... (கண்ணதாசன் )" என்று புளகாங்கிதமாக கவிஞரை நாலு கெட்ட வார்த்தைகளால்(!!) பாசம் கொட்டி , பாராட்டி விட்டு... 'தாழையாம் பூ முடிந்து..' பாகப் பிரிவினை பாடலை முழுவதுமாக என்னோடு speaker- இலேயே கேட்டுவிட்டு உறங்கப்போனான்...
நினைத்துப் பார்க்கிறேன்.... நான் நள்ளிரவில் பாடல் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது... ஹ்ம்ம்... இன்றிரவு...
"தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா , அது மானாபிமானங்களை காக்குமா ?!!!" என்று உரத்த குரலில் பாட தொடங்கி விட்டான்... "மச்சி, இந்த lines- க்கு விளக்கம் வேணும்டா " என்றான்.. :-)
ஆமாம்...இதே ஆச்சர்யம்தான் எனக்கும்... சீதனம், மான/ அபிமானம் எல்லாத்திற்கும் ஒவ்வொன்றாய் விளக்க... "மச்சி, சூப்பர்-டா... அவன் *&^%%$$@# டா அவன்... (கண்ணதாசன் )" என்று புளகாங்கிதமாக கவிஞரை நாலு கெட்ட வார்த்தைகளால்(!!) பாசம் கொட்டி , பாராட்டி விட்டு... 'தாழையாம் பூ முடிந்து..' பாகப் பிரிவினை பாடலை முழுவதுமாக என்னோடு speaker- இலேயே கேட்டுவிட்டு உறங்கப்போனான்...
நினைத்துப் பார்க்கிறேன்.... நான் நள்ளிரவில் பாடல் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது... ஹ்ம்ம்... இன்றிரவு...
Labels:
bits and pieces,
memories,
tamil,
thoughts,
சினிமா,
தமிழ்,
வலைப்பூக்கள்
| Reactions: |
வலைப்பூ...
இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்களில் ஒரு meeting -ற்குச் செல்ல வேண்டும்... திடீர் என்று வலைப்பூ தொடுக்க உந்துதல்.. நேற்று நள்ளிரவு 12 :30 -க்கு ரிஷியிடம் இருந்து ஒரு sms , "Machi, r u awake?" இன்று ஒரு முக்கியமான presentation-க்காக 10 மணி வரை என் அலுவலகத்தில் இருந்து விட்டு சென்றவன் திடீர் என்று தேடுவதில் ஒரு பதற்றம், நானே அழைத்தேன் (நம்புங்கள் , நான் பெண் பிள்ளைகளை மட்டும்தான் திரும்ப அழைப்பேன் என்று சுட்டும் நல்லுள்ளங்களே... :-p ),
அடடா... meeting ஆட்கள் வந்து விட்டார்கள்.... வந்து தொடர்கிறேன்........
Labels:
bits and pieces,
diary,
friends,
random,
tamil,
தமிழ்,
வலைப்பூக்கள்
| Reactions: |
Thursday, September 29, 2011
நெடுநாள் கடிதம்...
வாழ்க்கையின் சுழலில் சிக்கி அதை காரணம் காட்டி நம் பல வேலைகளை தட்டி கழித்து காரணிகள் புனைவது மிக மிக சுலபம்... அதைத் தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்..
இந்த மாதத்தில் நான் ரெயிலில் தனியாக பிரயாணம் செய்வது இது இரண்டாம் முறை. முன்பு தனியான பிரயாணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. பொதுவாக தனிமையே எனக்கு மிகப் பிடத்த ஒன்று...முன்பெல்லாம்...
இப்பொழுது இல்லையா? பிடிக்காமல் போய் விட்டதா என்ற கேள்வி தோன்றினால், ஆம் என்று கூற மாட்டேன்... ஆனால் முன்பு அளவு நான் எதையுமே ரசிப்பதில்லை என்பதுதான் உண்மை... :-( அதற்கான காரணம் எனக்கே புரியவில்லை....பிடிக்கவில்லை..
கடற்க்கரையில் காலாற நடக்க உந்துதல் இல்லை... கவிதைகள் வடித்து காலங்கள் ஆகிவிட்டது... புத்தகங்கள் படிப்பதில்லை.. கடவுளே, இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல விஷயமும் காண போய்கிட்டு இருக்கு.. நீதான் காப்பாத்தனும்...
வலைப்பூ பின்ன நேரம் இல்லாமல் இல்லை... கண்ட கழிய Site -க்களில் நேரம் செலவழிப்பதில் ஒரு பங்கு தான் ஆகப் போகிறது... (நான் facebook போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத site -களை பற்றி சொல்றேன்பா ) ஆனாலும் நேரமில்லை... வழக்கம் போல்..
இந்த மாதத்தில் நான் ரெயிலில் தனியாக பிரயாணம் செய்வது இது இரண்டாம் முறை. முன்பு தனியான பிரயாணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. பொதுவாக தனிமையே எனக்கு மிகப் பிடத்த ஒன்று...முன்பெல்லாம்...
இப்பொழுது இல்லையா? பிடிக்காமல் போய் விட்டதா என்ற கேள்வி தோன்றினால், ஆம் என்று கூற மாட்டேன்... ஆனால் முன்பு அளவு நான் எதையுமே ரசிப்பதில்லை என்பதுதான் உண்மை... :-( அதற்கான காரணம் எனக்கே புரியவில்லை....பிடிக்கவில்லை..
கடற்க்கரையில் காலாற நடக்க உந்துதல் இல்லை... கவிதைகள் வடித்து காலங்கள் ஆகிவிட்டது... புத்தகங்கள் படிப்பதில்லை.. கடவுளே, இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல விஷயமும் காண போய்கிட்டு இருக்கு.. நீதான் காப்பாத்தனும்...
மங்காத்தா பார்த்தேன்... சில முறைகள்... படம் பரவில்லை... Ajith என்ற தனி மனிதன் இரண்டே முக்கால் மணி நேரம் படத்தை நகர்த்தி செல்கிறான்... வேறு எதுவும் impressive-வாக இல்லை... வெங்கட் பிரபு என்னாச்சு பா ?
அலுவலகம் கொஞ்சம் கடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது... வாழ்க்கை முழுக்க இதைப்போல்தான் இருக்குமோ என்ற பயம் தோன்றுகிறது... சுவாரஸ்யம் பத்தாது இதில்... சீக்கிரம் வேற எதாச்சும் பண்ணனும்...
கோபிகா, மாதங்கி, அமிர்த சுகி , jatthin , இம்தியாஸ் , எல்லோரும் முறையே அப்பா , அம்மா ஆகி இருக்கிறார்கள்... :-) நெஞ்சம் நெகிழ்கிறது...
அகமத் அலி, மீரா சாகிப், ஐஸ்வர்யா , எல்லோரும் இப்பொழுது தான் 3 முடிச்சி இட்டு இருக்கிறார்கள்... அடுத்தது மகதீர், மாமா, மகேந்திரன், மோனிகா, மற்றும் சிலர் தயார்நிலை.... வாழ்க்கை தன வழக்கமான ஜெட் வேகத்தில் பின்னிப் பறந்து கொண்டிருக்கிறது...
நண்பனாக , மாமா-வாக, சிற்றப்பனாக என் கடமைகள் பலவற்றை செய்யாமல் கடத்தி வருகிறேன்... ஹும்ம்... இனிமேலாவது உருப்படவேண்டும்...
நிறைய எழுத வேண்டும்... பின்னிரவு வருகிறேன்...
Monday, July 11, 2011
yearn....
Let me just flow with the drift
Let me just blow with the gust
Let me just take wat is left
Let me be aloof n just rest
Let me be ordinary, please...
Let me be ordinary, please...
~ Ovel Sturck
Let me just blow with the gust
Let me just take wat is left
Let me be aloof n just rest
Let me be ordinary, please...
Let me be ordinary, please...
~ Ovel Sturck
Labels:
ovel sturck poems,
poetry
| Reactions: |
do u know
how hard it is
to let go...
sayin 'gud bye'
n bein scared
u might be right...
wen the thought passed
that the last kiss
might be the last...
do u know
how hard it is
to turn around
when she stops,
turns back
n vanishes
around the block...
when phone
doesn't sing
the song of
the familiar ring...
~ ovel sturck
how hard it is
to let go...
sayin 'gud bye'
n bein scared
u might be right...
wen the thought passed
that the last kiss
might be the last...
do u know
how hard it is
to turn around
when she stops,
turns back
n vanishes
around the block...
when phone
doesn't sing
the song of
the familiar ring...
~ ovel sturck
Labels:
attempt,
love,
ovel sturck poems,
poetry
| Reactions: |
Thursday, May 26, 2011
அமுது, அமுதன், பேபி, தாத்தா, stara, zuzu, அருள், அருள் குணாளன் என்ற நாமகரனங்களால் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நிலங்களில், அழைக்கப்பட்ட/அழைக்கப்படும் என் ஆசை மச்சானின் ஒரு சமீப முகநூல் (அதானுங்க, 'facebook') மனநிலை வாக்கியம் (status message) - 'கௌரவ வாக்கியம்னு' போடலாம்னு பார்த்தேன்...பின்ன... 'status'-naa கெளரவம்தானே ...but...வேணாம் ....
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த வாக்கியத்தில் உள்ள உண்மை என்னை பொளேர் என்று அரைகிறது... எனக்கு மட்டுமல்ல... என்னை சுற்றி, எனக்கு அருகில், என்னை விலகி, நான் அறியா, எனை அறிந்த .. எல்லா மனிதரின் வாழ்க்கையையும் / மன நிலையையும் பளிச்சென்று படம் பிடித்த இரட்டை வரி..
காரணம் இல்லா... காரணம் புரியா... தேடல் தீர்ந்த... தேடல் தெரியா... pointlessness in life....
எதற்கு எழுகிறேன்... எதை நோக்கி ஓடுகிறேன்... எதை அடைவேன்... ஏன் அதை தேடுகிறேன்... தெரியவில்லை...
அனால் பொழுது விடிந்து விட்டது.... எழ வேண்டும்... ஏன் என்றால் உலகம் எழுகிறது... நீயும் எழ வேண்டும்...
சரி...எழுகிறேன்...
உன் வயதுக்காரர்கள் பணம் தேடுகிறார்கள்..
சரி... நானும் தேடுகிறேன்...
கல்யாண வயது (??!!) அடைந்து விட்டாய்...
சரி மனமேடை சேர்கிறேன்...
நான்கு வருடங்கள் ஒரே வேலையிலா இருக்கிறாய் ???
சரி இருக்கும் வேலையை விட்டு விட்டு இரெக்கை தேடுகிறேன்...
ஆனால் உண்மையில் எனக்கு என்ன வேண்டும்...? எனக்கு எது மகிழ்வு?? நான் எழ காரணமில்லா நாட்கள் இருக்கவே கூடாதா?
எனக்கு எழ பிடிக்கவில்லை ....
எனக்கு இன்று உண்ண , உடுத்த பணம் இருக்கிறது... பணம் தெவை படுகையில் எழுந்து உழைத்துக் கொள்கிறேன்..
எனக்கு இருக்கும் வேலையே போதும்... இன்னொரு சில லட்சத்திற்காக பாழூர் வரை தினம் சென்று வெந்து (ஆமாம் வெந்து தான் )வர எனக்கு அவசியம் இல்லை...
எனக்கு திரு'மணம்' செல்லவில்லை... நாற்பதில் துணை தேவைப்பட்டால் நாற்பதில் தேடிக்கொள்கிறேன்...
எனக்கு எழ காரணமில்லை...விடுங்களேன்... please......
பி .கு . இனியாவின் இந்த பதிவின் - http://iniyasnehidhi.blogspot.com/2008/12/mozhiyil.html , எனது தினப் போலம்பல்களின் , கோடான கொடி மானிடப் பதர்களின் வாழ்கையின் ரத்தின (உண்மையிலேயே) சுருக்கம்தான் அமுதனின் அவ்விரு வரிகள்....
| Reactions: |
Wednesday, April 20, 2011
இனி எல்லாம் சுகமே......
உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....
உன் நெஞ்சிலே பாரம்....
உனக்காகவே நாளும்...
சுமைதாங்கியாய் தாங்குவேன்...
உன் கண்களின் ஓரம்...
எதற்காகவோ ஈரம்....
கண்ணீரை நான் மாற்றுவேன்...
வேதனை தீரலாம்...
வெறும்பனி விலகலாம்....
வெண்மேகமே.....
புது அழகிலே
நாளும் இணையலாம்...
உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை...
வாழ்வென்பதோர் கீதம்...
வளர்கின்றதோர் நாதம்...
நாளொன்றிலும் ஆனந்தம்...
நீ கண்டதோ துன்பம்...
இனி வாழ்வெலாம் இன்பம்...
சுக ராகமே ஆரம்பம்...
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது...
நம் சொந்தமோ
இன்று பிணைந்தது
இன்பம் பிறந்தது...
உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....
உன் நெஞ்சிலே பாரம்....
உனக்காகவே நாளும்...
சுமைதாங்கியாய் தாங்குவேன்...
உன் கண்களின் ஓரம்...
எதற்காகவோ ஈரம்....
கண்ணீரை நான் மாற்றுவேன்...
வேதனை தீரலாம்...
வெறும்பனி விலகலாம்....
வெண்மேகமே.....
புது அழகிலே
நாளும் இணையலாம்...
உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை...
வாழ்வென்பதோர் கீதம்...
வளர்கின்றதோர் நாதம்...
நாளொன்றிலும் ஆனந்தம்...
நீ கண்டதோ துன்பம்...
இனி வாழ்வெலாம் இன்பம்...
சுக ராகமே ஆரம்பம்...
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது...
நம் சொந்தமோ
இன்று பிணைந்தது
இன்பம் பிறந்தது...
உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)
