Monday, December 31, 2012

Happy New YEar!



"
வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
மனதர் ஆகினோம்..

மனிதர் ஆகினோம்

மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.

விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.

தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.

சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்

வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"

Sunday, October 07, 2012

தூரம்...

அன்புள்ள வைபர் ராட்சஷி,

உன்னைத் தேடி ஒரு கணத்தில்,
வின்னைத்தாண்டும் என் மனது,
உடலை தாங்கி-யும் சென்றால்
என்னவென்று ஒரு கனவு...

விழிகள் மூடி அரை நொடியில்,
உனைத் தந்து சேர்க்கும் என் கனவு,
விழிப்பை தாண்டி-யும் நிஜமாய்
நீள துடிக்குதென் மனது...

Friday, October 05, 2012

தொடங்கிவிட்டேன் பயணத்தை.





துருவத்தில் மீனாக
மனவெளியில் உருவித்தாய்

உனைக் காணும் பயணத்தில்
அடைவேனோ உடைவேனோ..

அடைந்தாலும் தொடுவேனோ,
கண்தீயால் சுடுவாயோ ?

உடைந்தாலும் அழுவேனோ
உன் மார்பை தருவாயோ?

விடைகான ஒரு வழிதான்...
...
தொடங்கிவிட்டேன் பயணத்தை...

Friday, September 07, 2012

சிறகுகள்..



சிறகுகள் தேடுமுன் ,
உன் வானத்தை தேடிடு. 
சுய கூண்டுக்குள் வாழ்கையில்,
பெரும் சிறகுகள் சுமைகளே...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--

Monday, July 16, 2012

Viduthalai :-p

Marking an important milestone. Deleted my FB account. :-) am giving myself 1 week before I go back. But hoping to make it a little longer. Let's see. :-)

Tuesday, July 10, 2012

கவித கவித..



என் நண்பன் தினேஷ் தான்  கல்யாணம் செய்துகொள்ள போகும் (காதல்-) பெண்ணுக்கு எழுதிய ஒரு கவிதை. என்னை பயங்கரமாக impress செய்து விட்டது .


" மணி ஒன்னு,
  நீ, நான் கல்யாணம்  பண்ண போற பொண்ணு, 
 தூக்கம் இல்லாம  எரியுது என் கண்ணு, 
 தயவு செய்ஞ்சு call பண்ணு "


இதை பார்க்க விளையாட்டாக 'கொலை வெறியாக ' இருக்கலாம்... அனால் என்னை பொறுத்த வரை ஒரு கவியின் (கவிதை + கவிஞன் ) ஆழம்- சுவை , எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் ஆழகாக  கூறுகிறான் என்பதில்தான் இருக்கிறது.


அந்த வகையில் என் தமிழ்  வகுப்பில் இரண்டு நாள் விளக்கம் நடத்தலாம் இந்த கவிதைக்கு.

                                                       -X -X -X -

தலைப்பே தேவை இல்லை... இரண்டாம் வரியிலேயே புரிந்து விடும் இந்த கவிதை எதை பற்றி என்ன, ஏது  என்பது எல்லாமே.


மணி ஒன்னு.
                             தலைவன் தான் இருக்கும் நிலையை, காலத்தை, பொதுவாக உறக்கும் கண்களில் தவழ, கனவுகள் நெஞ்சில் சுவைக்க உலகமே உறங்கி கிடக்கும் வேளையில் , நான் விழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று  தன்  பசலையை கூறி விட்டான்...


நீ, நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு .
                                                                                                நீ யாரோ அல்ல, வெறுமனே கடலை வருக்க நினைக்கும் பெண்ண அல்ல. வேறு ஏதேதோ பெண்களிடம் நான் இதை எதிர்பார்க்க வில்லை. உரிமையோடு, என் மனைவி ஆகப்  போகிற உன்னிடம்தான் என்னை அழைக்க வேண்டும், என்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.. என்று தனக்கு உள்ள உரிமையையும், தன்னை தொல்லை தருபவனாக தவறாக புரிந்து கொள்ள கூடாது அவள் என்ற கவலையிலும், கூறும் வார்த்தைகள்.

தூக்கம் இல்லாமல் எரியுது என் கண்ணு .
                                                                                       நன்பகல் ஒரு  மணியோ, என்று யாரேனும் ஒரு குரும்புக்காரருக்கு  ஐயம் இருந்தால் இந்த வரி அதனை நீக்கி இருக்கும். அது மட்டும் இன்றி தூக்கம் தனக்கு தேவை பட்டாலும், தன்  உடல் , கண் ஆகியவை சோர்வில் ஏங்கினாலும் அதையும் மீறி என்னால் தூங்க முடியவில்லை உன்  குரல் கேட்காமல், என்று தன்  காதலின் அவஸ்த்தையை கூறுகிறான்.


தயவு செய்ஞ்சு call  பண்ணு .
                                                            தன்னுடைய இந்த நிலைக்கு  யார் காரணம்? ஏன் இவன்  இந்த நிலையில் துயருற்று  கிடக்கிறான்? கடன் தொல்லையா? cricket match -ஆ ? அதற்கு பதில்.. இந்த வரி. என்னை இந்த துயரங்களில் இருந்து காப்பாற்று, ஒரே ஒரு முறை என்னிடம்  பேசி.. ஒரே ஒரு முறை தொலை பேசியில் உன் குரலை கேட்கவிட்டு..  உனக்காகத்தான் ,அதற்காத்தான் காத்திருக்கிறேன் என்று தன் ஏக்கத்தை  கூறி முடிக்கிறான்.



                                                         -X-X-X-X-

இது எல்லாவற்றிற்கும் மேல், இந்த ட்விட்டர் உலகில், 140 எழுத்துகளுக்குள்  இத்தனை உணர்ச்சியையும், செய்தியையும் கூறி விட்டான்... இப்பொழுது சொல்லுங்கள்..

"mani onnu, nee,
naan kalyanam pannapora ponnu,
thookam illaama eriyudhu en kannu,
thayavuseinju call pannu."


அடா.. அடா...

















Thursday, June 28, 2012

குறை ஒன்றும் இல்லை ...

குறை ஒன்றும் இல்லை இறைவா
சிறை ஏதும் மனம் பூட்ட இல்லாத வரை .

குறை ஒன்றும் இல்லை இறைவா
தரை மீதும் துயில் வந்து மீறும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
நிறை என்று  யாவும்  காணும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
கரை என்று உன்னை நோக்கும்   வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
பறை ஒன்று கேட்காமல் போகும் வரை..

Friday, June 01, 2012

Y am I feeling lonely when I should be feeling relieved?