--
மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...
சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...
--
ஆட்கொள்வையோ தோழி....
தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..
உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...
இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...
விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?
பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...
ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...
தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)
பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...
7 comments:
ஒளி,
உனக்கு கவிதை ந்ன்றாக வருகிறது.வாழ்த்துக்கள். காதலும் கவிதையும் பிரிக்க முடியாத இணைகள் என்பதை நீயும் நிருபித்து இருக்கிறாய்.இனி வரும் முயற்சிகள் உன்னை இன்னும் பட்டை தீட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரேமா
:)
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த பாடல். நல்லா எழுதி இருக்கீங்க Li! ஒரு முறை பாடிக் கூட பார்த்துகிட்டேன். :)
ஹா... இப்ப ஞாபகம் வருது, நீங்க திட்டும் கேட்டீங்கில்ல? எழுத்து பிழை நிறைய இருக்கு.. திருத்திடுங்க..
Really good oli... makes me miss all those time when we tried to write proper poetry while 'studying'... :)
vara vara love feeling romba jasthiya irukke??
@ goblet of wine: Enna sirippu?
@ sugirtha: romba romba :-D nejamma naan ellarum apdithaan padikkanum-nu nenachen... paadi, rasichu... :-) adhuku thaan mun kurippu ellam kudutthu ivlo build up..
but spelling mistake-ai kandupidikka mudiyalai iniya... 'sandhigal', 'kuril/nedil' sila idangal-la maari varuvathai solringa-na, adhu isaikaaga,kavithaikaaga idappattvai/vidappattavai.. matrabadi thayavuu seinju enna pizhai-nu sollidunga, illana thalai vedichidum... @-/
@zuzu : :-) zuzu, super la? enakkum nyabagam irukku zu.. ippo kooda FM keta andha nyabagangal thaan...
வாவ் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள்
Beautiful..
-Ish.
Post a Comment