Wednesday, April 20, 2011

இனி எல்லாம் சுகமே......

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....

உன் நெஞ்சிலே பாரம்....
உனக்காகவே நாளும்...
சுமைதாங்கியாய் தாங்குவேன்...

உன் கண்களின் ஓரம்...
எதற்காகவோ ஈரம்....
கண்ணீரை நான் மாற்றுவேன்...

வேதனை தீரலாம்...
வெறும்பனி விலகலாம்....

வெண்மேகமே.....
புது அழகிலே
நாளும் இணையலாம்...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை...

வாழ்வென்பதோர் கீதம்...
வளர்கின்றதோர் நாதம்...
நாளொன்றிலும் ஆனந்தம்...

நீ கண்டதோ துன்பம்...
இனி வாழ்வெலாம் இன்பம்...
சுக ராகமே ஆரம்பம்...

நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது...
நம் சொந்தமோ
இன்று பிணைந்தது
இன்பம் பிறந்தது...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....





Sunday, February 20, 2011

செல்லமே...

அதிகாலை வாய்க் கசப்பில்
விழிக்கிறேன்...

எழ வேண்டிய நேரம்தான்
என்றாலும்,

வாயின் கசப்பு எழுப்பியதை
எண்ணி,

இன்றைய பொழுது எப்படியோ
என்று

தண்ணீர் தேடி கொப்பளித்து
விட்டு...

பின்னேழுந்து, கிளம்பி, கீழே கீழிறங்கினால்
பிறந்தநாள் என்று

வாயில் இனிப்பை திணிக்கிறாய் நீ...

Sunday, January 09, 2011

இந்த வாரம்..

ஈரோடு பயணம். இந்த வாரம் சினேகாவின் திருமண வரவேற்பு ஈரோட்டில். வழக்கம் போல் நானும் திநேசனும்(தினேஷ் ) சூறாவளியாக காலையில் புறப்பட்டு, மாலையில் ஈரோடடைந்து , விழாவை சிறப்பித்து(!!??), இரவே திரும்பி சென்னை அடைந்தோம். :-)

சினேகாவை இதுவரை இரண்டே முறைதான் நேரில் சந்தித்தி இருக்கிறோம். தொலைபேசியில் சில முறைகள் கதைத்திருப்போம். அவ்வளவுதான்.
இரண்டே திருகில், திறக்க முடியாமல் இறுகி விடும் ஜாடி-மூடி போல, எங்கள் நட்பானது இறுகி விட்டது ஆச்சர்யம்.

இரயிலில் நல்ல தூக்கம். ஈரோடு இரயில் நிலையம் புருவம் உயரும் அளவிற்கு துப்புரவாக இருந்தது. 'ஒரு மணி நேரமாய் இரண்டாம் பிளாட்பாரம் , வெஸ்ட் சைடுல , தண்ணி வழியுது.. யாரும் பைகளை, பொய் உடனே பார்க்கவும்' என்று பயணிகள் தகவல் ஒலிபெருக்கியில் அக்கறையோடு அறிவிப்பு வந்தது அதை விட ஆச்சர்யம்.

இங்கே சென்னையில், ஒரு நாள் முழுக்க நீர்போக்கு இருந்தாலும், ஒரு நாயும்கூட நின்று பார்க்காது. தண்ணீர் தானாக தீர்ந்து, நீர்த்து போனால்தான் உண்டு.

கடலை என்னை lorry கவிழ்ந்தால் மட்டும் எப்படி 5 நிமிடத்தில் ஒட்டு மொத்த ஊரும் வந்து bucket-ஓடு முண்டி அடிக்கிறது என்று தெரியவில்லை. செய்தி 5 நிமிடத்தில் எட்டுவதே நினைத்துப் பார்க்க முடியவில்லை, அதற்குள் எங்கே இருந்து bucket, குடம் எல்லாம் கிடைத்து, வந்தும் சேர்ந்து விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னை எக்மோர் இரயில் நிலையம் உலகிலேயே வயசாளிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், கொஞ்சம் கூட அனுசரணையே இல்லாத இரயில் நிலையம்.

பேருக்கு ஒரு மின் படி.. ஒரு பிளாட்பார்மில் ஏறுவதற்கு மட்டும், இன்னொரு பிளாட்பார்மில் இருந்குவதர்க்கு மட்டும். அங்கே ஏறியவர் இங்க இறங்க வேண்டும் என்றால்? :-o

முடியாதோர்க்கு ஒரு ஊர்தி, அது முதல் இரண்டு பிளாட்போர்மில் மட்டும்தான் இயங்குமாம்.

சக்கர நாற்காலி இலவசம், ஆனால் அதை தள்ளுவதற்கு 200 தள்ள வேண்டும் போர்ட்டருக்கு . ஏன் என்றால் சர்க்கார நாற்காலி தள்ளவும் இடம் கிடையாது, ஒரு கோடியில் இருந்து மறு கோடி சென்று ஒவ்வொரு முறையும் 'திருச்சு' வர வேண்டும். ( இதில் நடு நடுவே தூக்கி இறக்கி, எழுந்து, கடந்து... ஸ்ஸ்ஸ் ....)

பத்து இடங்களில் நுழையலாம், ஆனால் பிளாட்பாரம் சீட்டு ஒரே ஒரு இடத்தில் தான் கிடைக்கும்.

உடல் ஊனமுற்றோரும், வயசாளிகளும், ஒவ்வொரு முறையும் படும் பாட்டை பார்த்து கொலை வெறி தோன்றினாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் ஒரு உணர்ச்சியும் தோன்ற மாட்டேன் என்கிறது?

Friday, December 10, 2010

Secret Paths...

Sorry for neglecting you all. I know it's been long. I do not have an excuse..as always.

Went through Zuzu's latest post about our FM days, and songs associated with memories..how each song distinctly brings up a particular memory associated with that song.

I and Zuzu share a very very special bond. A bond better than brotherhood, deeper than friendship. A bond which merges the both into one. I remember the days we used to listen to 'Morpheus'. And a quacky Indianized english speaking character who used to feature in the show now n then. I remember the episode when morpheus ran an hour from his tour in South America or somewhere. :-)

And ofcourse the golden shows from AIR "Vannak Kalanjiyam". The man who hosted the show had a very peculiar tamil name, which fails me now... but his voice and the parts of the show r so fresh in memory.

Thinking about this takes me further into the secret paths in my memory. Letting me rediscover the treasure hunt moments from our elementary and middle school childhoods. I remember us peeing on the 'Manathakkali' plant at our back yard every day just for the pure evil pleasure it gave us, knowing we were doing something we could get punished for.. and us drinking directly from the garden tap, cos the water tasted so much better than it did after it was boiled and filtered..

I remember the shacks we would create in the garden, under the trees, above the trees, behind the bushes, which were hideouts of our villains or vengeful vigilantes... remember the rainy afternoons where four of us would get under a blanket and our sisters(esp. malar) would tell us horrid tales of ghosts and secret caves connecting the schools and churches, where kids who disobeyed their sisters would be taken and chained...


Further, the memory travels down to the Grip ball, GI-Joe toys, He-Man strategies that were planned and the mountains and lakes, seas, villages, valleys, rivers that were created from ordinary bedsheets, bowls, pipes, towels, show horns, bottles, hair clips and stuff...

..to Teenage Mutant Ninja turtles(Raphael and Donatello) , Swat Cats (T-Bone and Razor), Centurions (Max Ray and Jake Rockwell), and surprisingly how used to fight to play haji's character instead of johnny's in Johnny quest.

Captain Marvel, in which I was the big red guy and Amudhan was the Blue guy. And how in our universe He-Man had a twin brother.. :-)

And how our sister's would throw us out of the room and lock the door because their barbies have to dress change... :-)

These memory paths seem to be going endlessly, like a maze... and not just any maze, but dangerously a maze in which I would happily and willingly get lost.. It just has one problem... It seems I have to get out at some point always... if only I can fix that and find a way to stay in... if only...

P.S. Zuzu, this is my comment for your post... I was sure blogger is not going to allow such a big comment, even before I tried... that's y made it a post here... Write something in ur space.. I missed out about our Guns and Arrows... :-)





Tuesday, November 23, 2010

சென்ற வார உலகம்.

சென்ற வாரம் ஒளியின் வீர வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மங்களூரு சென்று மீண்டும் சென்னைப் பயணம். மோட்டார் சைக்கிளில்.
இரண்டு நாட்களில்.

காலையில் வங்கக் கடலில் கண்டு புறப்பட்டு, அரபிக் கடலில் அஸ்தமனம் பார்ப்பதாக சூளுரைத்து கிளம்பினோம். கிளம்பினோம்.. சென்று திரும்ப இடையில் 1711 கிலோ மீட்டர்கள்.

பயணக் கட்டுரையல்ல இது. இந்த பயணம்-இப்படி ஒரு பயணம் தேவையா? என்பது பலரின் கேள்வியை இருந்தது. பெங்களூரில் நண்பர்களை பார்த்தாயா? மங்களூரில் இந்த இடம், அந்த இடம் எல்லாம் பார்த்தாயா? என்ற கேள்விகளுக்கு, நேரமே இல்லை, முதல் நாள் காலை நான்கு மணிக்கு கெளம்பி, மறுநாள் காலை நான்கு மணிக்கு மங்களூர் அடைந்து, அங்கிருந்து மீண்டும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டு விட்டோம் என்று பதில் அளிக்கையில், ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்டது போலவும், செழிப்பான மனோ நிலை இல்லாதவரிடம் பெசுவட்து போலவும் அவர்கள் பேசியது நகைக்க வைத்தது.

உண்மை. எதற்காக உடலையும், மனதையும் இப்படி வருத்திக்கொண்டு ஒரு பயணம்? முடி பட ஆயிரம் வேலைகள் இங்கிருக்கையில், இது என்ன?
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் பிடி பட வில்லை. ஒரு அரை கூவல். அதற்கு எங்கள் பதில் - இந்த பயணம்.

புதிய மனிதர்களை சந்திக்க ஓர் வாய்ப்பு. உடலும் மனமும் எவ்வளவு தாங்கும் எனக் வளைத்துப் பார்க்கும் ஆசை. இந்த வயதில் செய்யாவிடில் பின்னெப்போது, எனும் எண்ணம்.

இந்த பயணத்தின் பலன்கள், எந்த புறநானூற்று வீரனையும் வலியும் பொறாமையும் கொள்ள செய்யும் இரு விழுப் புண்கள். பல அனுபவங்கள். சில நண்பர்கள். எச்சரிக்கை. முதிர்ச்சி.

கோபிகா திருமணம். நானும் தவுலத்தும் இனைந்து பங்கேற்கும்.. இரண்டாவது திருமணம் என்று நினைக்கிறேன். முதல்- ஹாஜிராவின் உடையது - இரண்டரை ஆண்டுகளுக்கு முன்.

செங்கல்பட்டில் கோபிகா மணமக்களை வாழ்த்திவிட்டு, அப்படியே ஒரே மூச்சாக, திருவான்மியூரில் மஞ்சுநாதன் திருமண விழாவிலும் கலந்து சாதனை படைத்தேன். :-) ஒரே வீச்சில் மங்களூரு சென்று திரும்பியதை விடவும் இது எனக்கு அதிக மகிழ்ச்சி.

காலில் கட்டு. ப்றேயானத்தின் பொது ஏற்பட்ட விழுப்புண் தானை மாறும், ஆறும் என்ற ஒரு வார காத்திருப்புக்கு பின், கடைசியாய் அப்பாவிடம் காட்டிவிட்டேன். 5 மாத்திரைகள், முழு ஓய்வு, காலில் 'crepe bandage' எனப்படும் சுளுக்கு கட்டு ஒரு வாரத்திற்கு என்று அவர் தன் 'மருத்துவ' குணத்தை காட்டி விட்டார். :-(

இதற்குத்தான் நான் மருத்துவர்களை அன்டுவதுமில்லை , அன்ட விடுவதுமில்லை .

ஆனால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். போய்க்கொண்டே இருக்கும். இன்று இரவு இப்பதிவை தொடர்கிறேன்.. அதுவரை... விடை கொடு நண்ப.

Saturday, November 06, 2010

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். ஒரு பட்டாசு கூட கொளுத்தாத சோம்பேறி தீபாவளி இன்று எனக்கு. வீட்டை விட்டு இந்நொடி வரை வெளியே கால் பதிக்க வில்லை. பதிவு எழுத வேண்டும் என்று மதியம் மழைச்சாரல் முதல், மாலை மஞ்சள் பூக்கள் வரை என்னை உந்தித் தள்ளி கடைசியில் இதோ...

என்ன செய்து கொண்டிருந்தேன் இந்த இரு வாரங்கள்... சச்சினுக்கு கல்யாணம்.. மூன்று நாள் விழாவில் இரண்டு நாட்கள் அடியேன் பிரசன்னம் . அதிகாலை ஆறு மணி முகூர்த்தம்... ஐந்து மணிக்கு எழுந்தும் ஏழு மணிக்கு முன் செல்ல முடியவில்லை. ரிஷிக்கு வேஷ்டி எடுத்து சென்றது மட்டுமில்லாமல், அதை அவன் இடுப்பில் நிற்கவும் வைக்க நான் பட்ட பாடு.... அய்யய்யோ.... (அவ்வளவு கடினமாக இல்லை.. சும்மா ஒரு காமடி-க்கு )

வழக்கம் போல் நாங்கள் இருவர் தான் கடைசி... :-) ஆனாலும் அந்த கடைசியில் நாங்க தான் heroes!!!!

late-ஆக போனதோடு, நண்பர்கள் எல்லோரும் வழக்கம் போல கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு அய்யரை பற்றி அடித்த comment-கள் இன்னுமும் 12 B touch விட்டு போகலை என்பதை தெளிவாக காட்டின.. சச்சினுக்கும் , அவன் காதலிக்கும் மனைவிக்கும் , நாங்கள் அணிந்து சென்ற மைனர் cooling glass-களை மாட்டி விட்டு, போட்டோ போஸ்... என்று மேடையிலயும் comedy தொடர்ந்தது .. இறுதியில் buffet-யில் bearer-களை கலாய்த்து, parking-இல் driver-களோடு இனிதே நிறைவு பெற்றது..

சென்ற ஞாயிறு indi blogger வலைப்பூ திரட்டி நடத்திய madras magic என்ற வலைப்பதிவுகளை மேடை நாடகங்களாக இயற்றும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.. சிவகாமி பெத்தாச்சி அரங்கம்..

பகுதிகள் நன்றாக இருந்தன, ஜூடி எனும் பெண் பதிவரின் கனவுக் காதலன், மற்றும் பெண் பார்க்கும் படலங்களை கிண்டல் செய்யும் நாடகம் மிகவும் பிடித்திருந்தது...

மற்ற இரு படைப்புகளும், பகுதிகள் பரவாயில்லை... நிறைவாயில்லை... ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரை வழிக்காத பல துணுக்குகளுக்கு, எங்கள் முன் வரிசை இளம் பெண்கள் விழுந்து விழுந்து , உருண்டு பிரண்டு சிரித்தது, ஒரு வேலை கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று கவலை கொள்ள வைத்தது நிஜம்...

பிறகு... வெங்கடாசலம் திருமணம்.. கடைசி நொடியில் நண்பன் மஞ்சுநாதன் அழைத்து நினைவூட்ட வில்லை என்றால் :-( ??? 9 மணிக்கு ஓடினேன்... ஆனாலும் ஒரு மகிழ்ச்சி.. நண்பர் திருமண விழ attendance 90 % மேல் சீராக வைத்துக் கொண்டிருக்கிறேன்... பெருமை.


வேறென்ன...

Saturday, October 23, 2010

அதிகாலைத் தேநீர் திட்டம்...

கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,

வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -

என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,

மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...

விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,

அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...

Monday, October 11, 2010

வணக்கம் மக்களே !!

Hi, hi, hi, hi, hi!
Long time. Elated to know that friends miss me here. :-) Like I said, I like it when my friends miss me. If I had to give a reason for not being here for so long, I donn have one. I donno y.

Can't say nothing was happening.... UK projects, Weddings, My brother's India trip, Body massages, Bangalore-Mysore Trip with ma bro, Adventure biking(which includes diving over, landing face down, with the bike on top of me), Injury(which hasn't healed for over a month now), Speed boating, ENDHIRAN (4 times), Trekking, New friends, Swimming, Maha's visit, now Mahe's visit, phew... so much has been happening... Probably I should blame it on less time or rather, the world famous 'no time' excuse.

anways, being back, makes me feel gud! :-)


P.S. Want to write about each of the above mentioned events.... :-) Hope I do.

Monday, July 26, 2010

I love me.

A sensible guy can be sensitive too. Really. Now, is that a crime?

Well, if u r more happy with less of me, you don need to call me up and tell me that.
I like to think my friends miss me.

Well, as they say... life is like that.

:-) take care buddy.

Thursday, July 15, 2010

?

வாம்மா துரையம்மா... இது வங்கக் கரையம்மா....

சில நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்... மதராசப்பட்டினம் படம் பார்த்தேன்... நல்ல படம். சில இடங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தன... பல இடங்களில் இயக்குனர் அந்தக் கால மக்களை சித்தரிப்பதில் உரிமை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியோடு திரையரங்கை விலகினேன்...

கொச்சின் ஹனிபா என்ற ஒரு நல்ல நடிகனின் கடைசிப் படம்.. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்...

இந்த பதிவு அந்த படத்தை பற்றியதோ, இல்லை எனக்குப் பிடித்த கொச்சின் ஹனிபா பற்றியதோ இல்லை.. அவரைப் பற்றி வேறொரு நாள் எழுத முயல்வேன்...

இந்த பதிவு, படம் முடிந்து இதோ என் அறையில் பாடல் முணுமுணுத்த படி யோசிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமையைப் பற்றி.. நம் வாழ்வின் பதிவுகள் நாளை எப்படி எங்கே இருக்கும் என்பதைப் பற்றி...

ஐம்பது வருடங்கள் கழிந்தால் ஒளி யாருடைய நினைவில் இருப்பான், யாருடைய நினைவிலும் இருப்பானா என்பதை பற்றி...

இன்றிருக்கும் என் நண்பர்கள், அன்று எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி... வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதைப் பற்றி..

எல்லோருமே பிறந்து விட்டோம்... மூச்சு, இதயம் அனிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன... பசி, தூக்கம், காமம், எந்த வித அழைப்புமின்றி அறிவிப்புமின்றி தோன்றி- அது தீர்ந்து - மறைந்து கொண்டிருக்கின்றன... அவைகளின் பக்க விளைவுகளை சமாளித்துக் கொண்டு நடமாடி...

ஒருநாள் இவை அனைத்தும் நின்றுவிடும். அவற்றின் நிழல்கள் நீடிக்கும்.. காமத்தின் நிழல் பிள்ளைகளாய். பசியின் நிழல் விட்டுச்சென்ற தொழிலாய் . அயர்வின் நிழல் செர்த்துச்சென்ற சுகமாய்.

ஆனால் நாம் ? உங்கள் தாத்தாவின் பெயர் தெரியுமா? அவர் தொழில்? அவரது தந்தையின் பெயர்? தொழில்? அவரது பூர்விகம்? தெவை இல்லை, இல்லையா? அல்லது அவசியம் இல்லை.

அவர் சமாதி மண்ணோடு மக்கி விட்டது. அவர் நினைவு மங்கி விட்டது. அவரது கடைசி நிழல்படமும் கரையான் இரைப்பையில். இனி அவர் இல்லை. உங்கள் மகனுக்கு அவர் இல்லை. உங்கள் பேரனுக்கு உங்கள் தகப்பன் இல்லை.

அவர்கள் வாழ்வின் நீளம் 3 தலைமுறை. நீங்களும் மறக்கப் படுவீர்கள். உங்கள் பதிவுகள் திறக்கப் படாமல் போகும். நம் பெயர்கள் உச்ச்சரிக்கபடுவது ஒரு நாள் முற்றும் முற்றும். உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் உங்களின் சுவடரியாமல் போவார்கள்.

ஏன்? பசி. தூக்கம். காமம். இவற்றின் எச்சங்களை மட்டும் விட்டுச் சென்றால், நம் வாழ்வின் நீளமும் இதுதான். குறைய வாய்ப்புண்டு. நிச்சயமாய்.

அறிவு, உணர்வு, பரிவு. இவற்றை விதைத்து பாருங்கள். நீளும். வாழ்ந்தோம், மறைந்தோம், கரைந்தோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மூழ்கி மூச்சு முட்டி , இறக்கப்போகிறோம், மறக்கப் போகிறார்கள் என்று அறிந்து மரணம் சேர்வதில் உடன்பாடில்லை.

நான் நினைக்கப் பட வேண்டியவன். அதை நோக்கி நடக்கப் பழக வேண்டியவன்.