Wednesday, February 13, 2013

Catching up...

நன்மைகள் யாவும்
நம்மையே சேர..


வெகுநாட்களாக பதிவுகள் இட வேண்டும் வேண்டும் வேண்டும் என்று இருந்தும் முழுக்க முழுக்க சோம்பேறித்தனத்தினால் கடத்திக்கொண்டு இருந்தேன். இன்று 'ழ கபேயில் 'டியூடி' ;-) அக்காவின் காபிக் கடையில் வேலை ஆட்கள் குறைபாட்டினால் நான் இன்று இங்கு அமர்த்தபட்டிருக்கிறேன்.. எனக்கு பிடித்தமான வேலை... புதுப் புது மக்களை பார்ப்பது, பழகுவது  மகிழ்விப்பது, எல்லாம் எனக்கு பிடித்த விஷயங்கள்...

இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று இந்த பதிவை தொடர்கிறேன். சில விடயங்கள் சொல்ல வேண்டும்... சில செய்ய... எனது சாதாரண வாழ்கையை நானாகவே சிக்கலாக்கி கொள்வதில் நான் கரை கடந்துவிட்டேன்.. நன்றாக போய்க்கொண்டிருக்கும் பொழுது புதிதாக நானே எனக்கு 'வேலியில் போகும் ஓணான் ' வகையறா பிரச்சனைகளை எங்கெங்கோ விட்டுக்கொள்கிறேன்...


1984-இல் பிறந்து அடுத்த மாதத்தோடு 29 ஆண்டுகள் பறந்துவிட்டன. அகவை முப்பதில் அடி வைப்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது...


ஆனால் யோசிக்க பயமாய் இருக்கிறது...

Friday, February 08, 2013

Insistent existent persistent

Friday, January 11, 2013

(நானும்) நின்னைச் சரணடைந்தேன்....

காலை எழுந்தவுடன் FB ,
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,
வேலை முழுவதிலும் OB ,
வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,
இப்படி வாழ்ந்திடும் பாவி,
இவனை நீதான் காக்கணும் தேவி!!

Tuesday, January 01, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்!- 2013

வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
'மனதர்' ஆகினோம்..

மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.

விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.

தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.

சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்

வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


புத்தாண்டு வாழ்த்துக்கள் !





Monday, December 31, 2012

Happy New YEar!



"
வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
மனதர் ஆகினோம்..

மனிதர் ஆகினோம்

மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.

விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.

தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.

சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்

வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"

Sunday, October 07, 2012

தூரம்...

அன்புள்ள வைபர் ராட்சஷி,

உன்னைத் தேடி ஒரு கணத்தில்,
வின்னைத்தாண்டும் என் மனது,
உடலை தாங்கி-யும் சென்றால்
என்னவென்று ஒரு கனவு...

விழிகள் மூடி அரை நொடியில்,
உனைத் தந்து சேர்க்கும் என் கனவு,
விழிப்பை தாண்டி-யும் நிஜமாய்
நீள துடிக்குதென் மனது...

Friday, October 05, 2012

தொடங்கிவிட்டேன் பயணத்தை.





துருவத்தில் மீனாக
மனவெளியில் உருவித்தாய்

உனைக் காணும் பயணத்தில்
அடைவேனோ உடைவேனோ..

அடைந்தாலும் தொடுவேனோ,
கண்தீயால் சுடுவாயோ ?

உடைந்தாலும் அழுவேனோ
உன் மார்பை தருவாயோ?

விடைகான ஒரு வழிதான்...
...
தொடங்கிவிட்டேன் பயணத்தை...

Friday, September 07, 2012

சிறகுகள்..



சிறகுகள் தேடுமுன் ,
உன் வானத்தை தேடிடு. 
சுய கூண்டுக்குள் வாழ்கையில்,
பெரும் சிறகுகள் சுமைகளே...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--

Monday, July 16, 2012

Viduthalai :-p

Marking an important milestone. Deleted my FB account. :-) am giving myself 1 week before I go back. But hoping to make it a little longer. Let's see. :-)