Friday, October 05, 2012

தொடங்கிவிட்டேன் பயணத்தை.





துருவத்தில் மீனாக
மனவெளியில் உருவித்தாய்

உனைக் காணும் பயணத்தில்
அடைவேனோ உடைவேனோ..

அடைந்தாலும் தொடுவேனோ,
கண்தீயால் சுடுவாயோ ?

உடைந்தாலும் அழுவேனோ
உன் மார்பை தருவாயோ?

விடைகான ஒரு வழிதான்...
...
தொடங்கிவிட்டேன் பயணத்தை...

Friday, September 07, 2012

சிறகுகள்..



சிறகுகள் தேடுமுன் ,
உன் வானத்தை தேடிடு. 
சுய கூண்டுக்குள் வாழ்கையில்,
பெரும் சிறகுகள் சுமைகளே...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--

Monday, July 16, 2012

Viduthalai :-p

Marking an important milestone. Deleted my FB account. :-) am giving myself 1 week before I go back. But hoping to make it a little longer. Let's see. :-)

Tuesday, July 10, 2012

கவித கவித..



என் நண்பன் தினேஷ் தான்  கல்யாணம் செய்துகொள்ள போகும் (காதல்-) பெண்ணுக்கு எழுதிய ஒரு கவிதை. என்னை பயங்கரமாக impress செய்து விட்டது .


" மணி ஒன்னு,
  நீ, நான் கல்யாணம்  பண்ண போற பொண்ணு, 
 தூக்கம் இல்லாம  எரியுது என் கண்ணு, 
 தயவு செய்ஞ்சு call பண்ணு "


இதை பார்க்க விளையாட்டாக 'கொலை வெறியாக ' இருக்கலாம்... அனால் என்னை பொறுத்த வரை ஒரு கவியின் (கவிதை + கவிஞன் ) ஆழம்- சுவை , எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் ஆழகாக  கூறுகிறான் என்பதில்தான் இருக்கிறது.


அந்த வகையில் என் தமிழ்  வகுப்பில் இரண்டு நாள் விளக்கம் நடத்தலாம் இந்த கவிதைக்கு.

                                                       -X -X -X -

தலைப்பே தேவை இல்லை... இரண்டாம் வரியிலேயே புரிந்து விடும் இந்த கவிதை எதை பற்றி என்ன, ஏது  என்பது எல்லாமே.


மணி ஒன்னு.
                             தலைவன் தான் இருக்கும் நிலையை, காலத்தை, பொதுவாக உறக்கும் கண்களில் தவழ, கனவுகள் நெஞ்சில் சுவைக்க உலகமே உறங்கி கிடக்கும் வேளையில் , நான் விழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று  தன்  பசலையை கூறி விட்டான்...


நீ, நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு .
                                                                                                நீ யாரோ அல்ல, வெறுமனே கடலை வருக்க நினைக்கும் பெண்ண அல்ல. வேறு ஏதேதோ பெண்களிடம் நான் இதை எதிர்பார்க்க வில்லை. உரிமையோடு, என் மனைவி ஆகப்  போகிற உன்னிடம்தான் என்னை அழைக்க வேண்டும், என்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.. என்று தனக்கு உள்ள உரிமையையும், தன்னை தொல்லை தருபவனாக தவறாக புரிந்து கொள்ள கூடாது அவள் என்ற கவலையிலும், கூறும் வார்த்தைகள்.

தூக்கம் இல்லாமல் எரியுது என் கண்ணு .
                                                                                       நன்பகல் ஒரு  மணியோ, என்று யாரேனும் ஒரு குரும்புக்காரருக்கு  ஐயம் இருந்தால் இந்த வரி அதனை நீக்கி இருக்கும். அது மட்டும் இன்றி தூக்கம் தனக்கு தேவை பட்டாலும், தன்  உடல் , கண் ஆகியவை சோர்வில் ஏங்கினாலும் அதையும் மீறி என்னால் தூங்க முடியவில்லை உன்  குரல் கேட்காமல், என்று தன்  காதலின் அவஸ்த்தையை கூறுகிறான்.


தயவு செய்ஞ்சு call  பண்ணு .
                                                            தன்னுடைய இந்த நிலைக்கு  யார் காரணம்? ஏன் இவன்  இந்த நிலையில் துயருற்று  கிடக்கிறான்? கடன் தொல்லையா? cricket match -ஆ ? அதற்கு பதில்.. இந்த வரி. என்னை இந்த துயரங்களில் இருந்து காப்பாற்று, ஒரே ஒரு முறை என்னிடம்  பேசி.. ஒரே ஒரு முறை தொலை பேசியில் உன் குரலை கேட்கவிட்டு..  உனக்காகத்தான் ,அதற்காத்தான் காத்திருக்கிறேன் என்று தன் ஏக்கத்தை  கூறி முடிக்கிறான்.



                                                         -X-X-X-X-

இது எல்லாவற்றிற்கும் மேல், இந்த ட்விட்டர் உலகில், 140 எழுத்துகளுக்குள்  இத்தனை உணர்ச்சியையும், செய்தியையும் கூறி விட்டான்... இப்பொழுது சொல்லுங்கள்..

"mani onnu, nee,
naan kalyanam pannapora ponnu,
thookam illaama eriyudhu en kannu,
thayavuseinju call pannu."


அடா.. அடா...

















Thursday, June 28, 2012

குறை ஒன்றும் இல்லை ...

குறை ஒன்றும் இல்லை இறைவா
சிறை ஏதும் மனம் பூட்ட இல்லாத வரை .

குறை ஒன்றும் இல்லை இறைவா
தரை மீதும் துயில் வந்து மீறும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
நிறை என்று  யாவும்  காணும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
கரை என்று உன்னை நோக்கும்   வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
பறை ஒன்று கேட்காமல் போகும் வரை..

Friday, June 01, 2012

Y am I feeling lonely when I should be feeling relieved? 

Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.


Tuesday, November 29, 2011

வலைப்பூ-2

அழைத்தேன்... "மச்சி, எனக்கு ஒரு அர்த்தம்   தெரிஞ்சாகனும் " என்று முதல் மரியாதை கிழவன் கணக்காக தொடங்கினான்... அய்யயோ, இன்று செய்தளித்த presentation -இல் ஏதோ சொதப்பல் போல என்று எண்ணியபடியே "என்ன மச்சி, சொல்லுடா", என்றதும்...
"தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு  வந்தால் போதுமா , அது மானாபிமானங்களை காக்குமா ?!!!" என்று உரத்த குரலில் பாட தொடங்கி விட்டான்... "மச்சி, இந்த lines- க்கு விளக்கம் வேணும்டா " என்றான்.. :-)

ஆமாம்...இதே ஆச்சர்யம்தான் எனக்கும்... சீதனம், மான/ அபிமானம்  எல்லாத்திற்கும் ஒவ்வொன்றாய் விளக்க... "மச்சி, சூப்பர்-டா... அவன் *&^%%$$@# டா அவன்... (கண்ணதாசன் )" என்று புளகாங்கிதமாக கவிஞரை நாலு கெட்ட வார்த்தைகளால்(!!) பாசம் கொட்டி , பாராட்டி விட்டு... 'தாழையாம் பூ முடிந்து..' பாகப் பிரிவினை பாடலை முழுவதுமாக என்னோடு speaker- இலேயே கேட்டுவிட்டு உறங்கப்போனான்...


நினைத்துப் பார்க்கிறேன்.... நான் நள்ளிரவில் பாடல் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது... ஹ்ம்ம்... இன்றிரவு...




வலைப்பூ...

இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்களில் ஒரு meeting -ற்குச் செல்ல வேண்டும்... திடீர் என்று வலைப்பூ தொடுக்க உந்துதல்.. நேற்று நள்ளிரவு 12 :30 -க்கு ரிஷியிடம் இருந்து ஒரு sms , "Machi, r u awake?" இன்று ஒரு முக்கியமான presentation-க்காக 10 மணி வரை என் அலுவலகத்தில் இருந்து விட்டு சென்றவன் திடீர் என்று தேடுவதில்  ஒரு பதற்றம், நானே அழைத்தேன் (நம்புங்கள் , நான் பெண் பிள்ளைகளை மட்டும்தான் திரும்ப அழைப்பேன் என்று சுட்டும் நல்லுள்ளங்களே... :-p ),

அடடா... meeting ஆட்கள் வந்து விட்டார்கள்.... வந்து தொடர்கிறேன்........