Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.


Tuesday, November 29, 2011

வலைப்பூ-2

அழைத்தேன்... "மச்சி, எனக்கு ஒரு அர்த்தம்   தெரிஞ்சாகனும் " என்று முதல் மரியாதை கிழவன் கணக்காக தொடங்கினான்... அய்யயோ, இன்று செய்தளித்த presentation -இல் ஏதோ சொதப்பல் போல என்று எண்ணியபடியே "என்ன மச்சி, சொல்லுடா", என்றதும்...
"தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு  வந்தால் போதுமா , அது மானாபிமானங்களை காக்குமா ?!!!" என்று உரத்த குரலில் பாட தொடங்கி விட்டான்... "மச்சி, இந்த lines- க்கு விளக்கம் வேணும்டா " என்றான்.. :-)

ஆமாம்...இதே ஆச்சர்யம்தான் எனக்கும்... சீதனம், மான/ அபிமானம்  எல்லாத்திற்கும் ஒவ்வொன்றாய் விளக்க... "மச்சி, சூப்பர்-டா... அவன் *&^%%$$@# டா அவன்... (கண்ணதாசன் )" என்று புளகாங்கிதமாக கவிஞரை நாலு கெட்ட வார்த்தைகளால்(!!) பாசம் கொட்டி , பாராட்டி விட்டு... 'தாழையாம் பூ முடிந்து..' பாகப் பிரிவினை பாடலை முழுவதுமாக என்னோடு speaker- இலேயே கேட்டுவிட்டு உறங்கப்போனான்...


நினைத்துப் பார்க்கிறேன்.... நான் நள்ளிரவில் பாடல் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது... ஹ்ம்ம்... இன்றிரவு...




வலைப்பூ...

இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்களில் ஒரு meeting -ற்குச் செல்ல வேண்டும்... திடீர் என்று வலைப்பூ தொடுக்க உந்துதல்.. நேற்று நள்ளிரவு 12 :30 -க்கு ரிஷியிடம் இருந்து ஒரு sms , "Machi, r u awake?" இன்று ஒரு முக்கியமான presentation-க்காக 10 மணி வரை என் அலுவலகத்தில் இருந்து விட்டு சென்றவன் திடீர் என்று தேடுவதில்  ஒரு பதற்றம், நானே அழைத்தேன் (நம்புங்கள் , நான் பெண் பிள்ளைகளை மட்டும்தான் திரும்ப அழைப்பேன் என்று சுட்டும் நல்லுள்ளங்களே... :-p ),

அடடா... meeting ஆட்கள் வந்து விட்டார்கள்.... வந்து தொடர்கிறேன்........

Thursday, September 29, 2011

நெடுநாள் கடிதம்...

வாழ்க்கையின் சுழலில் சிக்கி அதை காரணம் காட்டி நம் பல வேலைகளை தட்டி கழித்து காரணிகள் புனைவது மிக மிக சுலபம்... அதைத் தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்..

வலைப்பூ பின்ன நேரம் இல்லாமல் இல்லை... கண்ட கழிய Site -க்களில் நேரம் செலவழிப்பதில் ஒரு பங்கு தான் ஆகப் போகிறது... (நான் facebook போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத site -களை பற்றி சொல்றேன்பா ) ஆனாலும் நேரமில்லை... வழக்கம் போல்.. 

இந்த மாதத்தில் நான் ரெயிலில் தனியாக பிரயாணம் செய்வது இது இரண்டாம் முறை. முன்பு தனியான பிரயாணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. பொதுவாக தனிமையே எனக்கு மிகப் பிடத்த ஒன்று...முன்பெல்லாம்...

இப்பொழுது இல்லையா? பிடிக்காமல் போய் விட்டதா என்ற கேள்வி தோன்றினால், ஆம் என்று கூற மாட்டேன்... ஆனால் முன்பு அளவு நான் எதையுமே ரசிப்பதில்லை என்பதுதான் உண்மை... :-( அதற்கான காரணம் எனக்கே புரியவில்லை....பிடிக்கவில்லை..

கடற்க்கரையில் காலாற நடக்க உந்துதல் இல்லை... கவிதைகள் வடித்து காலங்கள் ஆகிவிட்டது...  புத்தகங்கள் படிப்பதில்லை.. கடவுளே, இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல விஷயமும் காண போய்கிட்டு இருக்கு.. நீதான் காப்பாத்தனும்...


மங்காத்தா  பார்த்தேன்... சில முறைகள்... படம் பரவில்லை... Ajith என்ற தனி மனிதன் இரண்டே முக்கால் மணி நேரம் படத்தை நகர்த்தி செல்கிறான்... வேறு எதுவும் impressive-வாக இல்லை... வெங்கட் பிரபு என்னாச்சு பா ? 

அலுவலகம் கொஞ்சம் கடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது... வாழ்க்கை முழுக்க இதைப்போல்தான் இருக்குமோ என்ற பயம் தோன்றுகிறது... சுவாரஸ்யம் பத்தாது இதில்... சீக்கிரம் வேற எதாச்சும் பண்ணனும்... 

கோபிகா, மாதங்கி, அமிர்த சுகி , jatthin , இம்தியாஸ் , எல்லோரும் முறையே அப்பா , அம்மா ஆகி இருக்கிறார்கள்... :-) நெஞ்சம் நெகிழ்கிறது... 

அகமத் அலி, மீரா சாகிப், ஐஸ்வர்யா , எல்லோரும் இப்பொழுது தான் 3 முடிச்சி இட்டு இருக்கிறார்கள்... அடுத்தது மகதீர், மாமா, மகேந்திரன், மோனிகா, மற்றும் சிலர் தயார்நிலை.... வாழ்க்கை தன வழக்கமான ஜெட் வேகத்தில் பின்னிப் பறந்து கொண்டிருக்கிறது... 
நண்பனாக , மாமா-வாக, சிற்றப்பனாக  என்  கடமைகள்  பலவற்றை செய்யாமல் கடத்தி வருகிறேன்... ஹும்ம்... இனிமேலாவது உருப்படவேண்டும்...

நிறைய எழுத வேண்டும்... பின்னிரவு வருகிறேன்... 










Monday, July 11, 2011

yearn....

Let me just flow with the drift

Let me just blow with the gust

Let me just take wat is left

Let me be aloof n just rest

Let me be ordinary, please...

Let me be ordinary, please...

~ Ovel Sturck
do u know
how hard it is
to let go...

sayin 'gud bye'
n bein scared
u might be right...

wen the thought passed
that the last kiss
might be the last...

do u know
how hard it is
to turn around

when she stops,
turns back
n vanishes
around the block...

when phone
doesn't sing
the song of
the familiar ring...


~ ovel sturck

Thursday, May 26, 2011


அமுது, அமுதன்
, பேபி, தாத்தா, stara, zuzu, அருள், அருள் குணாளன் என்ற நாமகரனங்களால் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நிலங்களில், அழைக்கப்பட்ட/அழைக்கப்படும் என் ஆசை மச்சானின் ஒரு சமீப முகநூல் (அதானுங்க, 'facebook') மனநிலை வாக்கியம் (status message) - 'கௌரவ வாக்கியம்னு' போடலாம்னு பார்த்தேன்...பின்ன... 'status'-naa கெளரவம்தானே ...but...வேணாம் ....

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த வாக்கியத்தில் உள்ள உண்மை என்னை பொளேர் என்று அரைகிறது... எனக்கு மட்டுமல்ல... என்னை சுற்றி, எனக்கு அருகில், என்னை விலகி, நான் அறியா, எனை அறிந்த .. எல்லா மனிதரின் வாழ்க்கையையும் / மன நிலையையும் பளிச்சென்று படம் பிடித்த இரட்டை வரி..

காரணம் இல்லா... காரணம் புரியா... தேடல் தீர்ந்த... தேடல் தெரியா... pointlessness in life....

எதற்கு எழுகிறேன்... எதை நோக்கி ஓடுகிறேன்... எதை அடைவேன்... ஏன் அதை தேடுகிறேன்... தெரியவில்லை...

அனால் பொழுது விடிந்து விட்டது.... எழ வேண்டும்... ஏன் என்றால் உலகம் எழுகிறது... நீயும் எழ வேண்டும்...

சரி...எழுகிறேன்...

உன் வயதுக்காரர்கள் பணம் தேடுகிறார்கள்..

சரி... நானும் தேடுகிறேன்...

கல்யாண வயது (??!!) அடைந்து விட்டாய்...

சரி மனமேடை சேர்கிறேன்...

நான்கு வருடங்கள் ஒரே வேலையிலா இருக்கிறாய் ???

சரி இருக்கும் வேலையை விட்டு விட்டு இரெக்கை தேடுகிறேன்...


ஆனால் உண்மையில் எனக்கு என்ன வேண்டும்...? எனக்கு எது மகிழ்வு?? நான் எழ காரணமில்லா நாட்கள் இருக்கவே கூடாதா?

எனக்கு எழ பிடிக்கவில்லை ....

எனக்கு இன்று உண்ண , உடுத்த பணம் இருக்கிறது... பணம் தெவை படுகையில் எழுந்து உழைத்துக் கொள்கிறேன்..

எனக்கு இருக்கும் வேலையே போதும்... இன்னொரு சில லட்சத்திற்காக பாழூர் வரை தினம் சென்று வெந்து (ஆமாம் வெந்து தான் )வர எனக்கு அவசியம் இல்லை...

எனக்கு திரு'மணம்' செல்லவில்லை... நாற்பதில் துணை தேவைப்பட்டால் நாற்பதில் தேடிக்கொள்கிறேன்...

எனக்கு எழ காரணமில்லை...விடுங்களேன்... please......



பி .கு . இனியாவின் இந்த பதிவின் - http://iniyasnehidhi.blogspot.com/2008/12/mozhiyil.html , எனது தினப் போலம்பல்களின் , கோடான கொடி மானிடப் பதர்களின் வாழ்கையின் ரத்தின (உண்மையிலேயே) சுருக்கம்தான் அமுதனின் அவ்விரு வரிகள்....

Wednesday, April 20, 2011

இனி எல்லாம் சுகமே......

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....

உன் நெஞ்சிலே பாரம்....
உனக்காகவே நாளும்...
சுமைதாங்கியாய் தாங்குவேன்...

உன் கண்களின் ஓரம்...
எதற்காகவோ ஈரம்....
கண்ணீரை நான் மாற்றுவேன்...

வேதனை தீரலாம்...
வெறும்பனி விலகலாம்....

வெண்மேகமே.....
புது அழகிலே
நாளும் இணையலாம்...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை...

வாழ்வென்பதோர் கீதம்...
வளர்கின்றதோர் நாதம்...
நாளொன்றிலும் ஆனந்தம்...

நீ கண்டதோ துன்பம்...
இனி வாழ்வெலாம் இன்பம்...
சுக ராகமே ஆரம்பம்...

நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது...
நம் சொந்தமோ
இன்று பிணைந்தது
இன்பம் பிறந்தது...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....





Sunday, February 20, 2011

செல்லமே...

அதிகாலை வாய்க் கசப்பில்
விழிக்கிறேன்...

எழ வேண்டிய நேரம்தான்
என்றாலும்,

வாயின் கசப்பு எழுப்பியதை
எண்ணி,

இன்றைய பொழுது எப்படியோ
என்று

தண்ணீர் தேடி கொப்பளித்து
விட்டு...

பின்னேழுந்து, கிளம்பி, கீழே கீழிறங்கினால்
பிறந்தநாள் என்று

வாயில் இனிப்பை திணிக்கிறாய் நீ...

Sunday, January 09, 2011

இந்த வாரம்..

ஈரோடு பயணம். இந்த வாரம் சினேகாவின் திருமண வரவேற்பு ஈரோட்டில். வழக்கம் போல் நானும் திநேசனும்(தினேஷ் ) சூறாவளியாக காலையில் புறப்பட்டு, மாலையில் ஈரோடடைந்து , விழாவை சிறப்பித்து(!!??), இரவே திரும்பி சென்னை அடைந்தோம். :-)

சினேகாவை இதுவரை இரண்டே முறைதான் நேரில் சந்தித்தி இருக்கிறோம். தொலைபேசியில் சில முறைகள் கதைத்திருப்போம். அவ்வளவுதான்.
இரண்டே திருகில், திறக்க முடியாமல் இறுகி விடும் ஜாடி-மூடி போல, எங்கள் நட்பானது இறுகி விட்டது ஆச்சர்யம்.

இரயிலில் நல்ல தூக்கம். ஈரோடு இரயில் நிலையம் புருவம் உயரும் அளவிற்கு துப்புரவாக இருந்தது. 'ஒரு மணி நேரமாய் இரண்டாம் பிளாட்பாரம் , வெஸ்ட் சைடுல , தண்ணி வழியுது.. யாரும் பைகளை, பொய் உடனே பார்க்கவும்' என்று பயணிகள் தகவல் ஒலிபெருக்கியில் அக்கறையோடு அறிவிப்பு வந்தது அதை விட ஆச்சர்யம்.

இங்கே சென்னையில், ஒரு நாள் முழுக்க நீர்போக்கு இருந்தாலும், ஒரு நாயும்கூட நின்று பார்க்காது. தண்ணீர் தானாக தீர்ந்து, நீர்த்து போனால்தான் உண்டு.

கடலை என்னை lorry கவிழ்ந்தால் மட்டும் எப்படி 5 நிமிடத்தில் ஒட்டு மொத்த ஊரும் வந்து bucket-ஓடு முண்டி அடிக்கிறது என்று தெரியவில்லை. செய்தி 5 நிமிடத்தில் எட்டுவதே நினைத்துப் பார்க்க முடியவில்லை, அதற்குள் எங்கே இருந்து bucket, குடம் எல்லாம் கிடைத்து, வந்தும் சேர்ந்து விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னை எக்மோர் இரயில் நிலையம் உலகிலேயே வயசாளிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், கொஞ்சம் கூட அனுசரணையே இல்லாத இரயில் நிலையம்.

பேருக்கு ஒரு மின் படி.. ஒரு பிளாட்பார்மில் ஏறுவதற்கு மட்டும், இன்னொரு பிளாட்பார்மில் இருந்குவதர்க்கு மட்டும். அங்கே ஏறியவர் இங்க இறங்க வேண்டும் என்றால்? :-o

முடியாதோர்க்கு ஒரு ஊர்தி, அது முதல் இரண்டு பிளாட்போர்மில் மட்டும்தான் இயங்குமாம்.

சக்கர நாற்காலி இலவசம், ஆனால் அதை தள்ளுவதற்கு 200 தள்ள வேண்டும் போர்ட்டருக்கு . ஏன் என்றால் சர்க்கார நாற்காலி தள்ளவும் இடம் கிடையாது, ஒரு கோடியில் இருந்து மறு கோடி சென்று ஒவ்வொரு முறையும் 'திருச்சு' வர வேண்டும். ( இதில் நடு நடுவே தூக்கி இறக்கி, எழுந்து, கடந்து... ஸ்ஸ்ஸ் ....)

பத்து இடங்களில் நுழையலாம், ஆனால் பிளாட்பாரம் சீட்டு ஒரே ஒரு இடத்தில் தான் கிடைக்கும்.

உடல் ஊனமுற்றோரும், வயசாளிகளும், ஒவ்வொரு முறையும் படும் பாட்டை பார்த்து கொலை வெறி தோன்றினாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் ஒரு உணர்ச்சியும் தோன்ற மாட்டேன் என்கிறது?